|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

பால் கறி குழம்பு

செய்முறை

ஓர் ஈயம் பூசிய பாத்திரத்தில் எருமைப் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதிக்கையில் அரை தேக்கரண்டி உப்பை போடவும். பால் நன்றாகக் கொதித்து வரும்பொழுது இரண்டு தடவை கிளறி விட வேண்டும். பின்பு கெட்டித்தயிரை ஊற்றி, மேலும் கொதிக்க விடவேண்டும். சிறிது நேரத்தில் பால் விண்டு, தண்ணீர் வேறு, பால் கட்டிகள் வேறாகி விடும். அதை அப்படியே ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். பால் கட்டிகள் துணியின் மேல் தங்கிவிடும். வடித்த நீரை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். துணியில் தங்கியுள்ள பால் கட்டிகளை அப்படியே ஒன்றாக சேர்த்து, அதே துணியில் சிறு முடிச்சாக கட்டி, ஓர் ஆணியில் தொங்கவிட வேண்டும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய், முந்திரி பருப்பு, கசகசா, இஞ்சி ஆகியவற்றை அம்மியில் வெண்ணையைப் போல அரைக்க வேண்டும். அரைத்த விழுதில் வடிகட்டி தனியே வைத்துள்ள பால் தண்ணீரை ஊற்றி, நன்றாகக் கரைத்துக் கொண்டு ஒரு சல்லடையில் வடிகட்ட வேண்டும். அந்தக் கலவையை தனியே ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் டால்டாவை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும், சீரகம், கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் தனியே வைத்துள்ள கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூளைப் போடவும். சுமா£ர் 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக சுண்டியதும், உருண்டைகளாக கட்டி வைத்துள்ள பால் கட்டியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும். குழம்பு திரண்டு கொதி வந்ததும், அதில் நெய்யை ஊற்றி, பாத்திரத்தை கீழே இறக்கி மூடி வைக்க வேண்டும். சுமார் 10 நிமிடம் கழித்து சோற்றில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருள்கள்
எருமைப்பால்
ஒரு லிட்டர்
கெட்டித்தயிர்
ஒரு லிட்டர்
நெய்
6 டீஸ்பூன்
டால்டா
50 கிராம்
சீரகம்
டீஸ்பூன்
கிராம்பு 4
ஏலக்காய்
4
கசகசா
2 டீஸ்பூன்
பாதாம்பருப்பு
8
முந்திரிப்பருப்பு
50 கிராம்
தேங்காய்
அரை மூடி
வெங்காயம்
100 கிராம்
பூண்டு
1
இஞ்சி
சிறு துண்டு
பச்சை மிளகாய்
பெரியது 10
கொத்தமல்லி
சிறு கொத்து
மஞ்சள்தூள்
ஒரு டீஸ்பூன்
உப்பு
தேவையான அளவு

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter