|
மாம்பழக் குழம்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாம்பழங்களை பெரிய துண்டங்களாக நறுக்கிப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைக்க வேண்டும். அதில் சிறிது உப்பு, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு, கிளறிவிடவும். தேங்காயை துருவி அம்மியில் அரைக்க வேண்டும். அத்துடன் சீரகம், பச்சை மிளகாய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, நன்றாக அரைத்து வழித்தெடுத்து, பாத்திரத்தில் உள்ள தயிருடன் கலந்து கொள்ளவும். பிறகு அடுப்பில் கொதித்துக் கொண்டு இருக்கும் மாம்பழத்துண்டங்களுடன் அரைத்து வைத்துள்ள தயிர்க் கலவையைக் கொட்டி, கிளறி விட வேண்டும். சுமார் 10 நிமிடம் கழித்து, குழம்பு கொதித்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, மிளகாய்வற்றலை கிள்ளிப் போட்டு தாளிக்க வேண்டும். அந்த தாளித்ததை குழம்பில் கொட்டவும். இதுவே மாம்பழக் குழம்பு என்பது. இதை சுடச்சுட சோற்றில் பிசைந்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். போட்டோ, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
மாம்பழங்கள்
(அரைப்பழமாக உள்ளது) |
4 |
கடலைப்பருப்பு
|
2 டீஸ்பூன்
|
| தேங்காய் |
அரை மூடி
|
மஞ்சள்தூள்
|
சிறிது
|
| சீரகம் |
அரைடீஸ்பூன்
|
மிளகாய்வற்றல்
|
4 |
பச்சை மிளகாய்
|
6 |
தயிர்
|
150 மி.லி.
|
கறிவேப்பிலை
|
சிறு கொத்து
|
உப்பு
|
தேவையான அளவு
|
|