|
மசாலா கட்லெட்
செய்முறை
உருளைக்கிழங்கு, காரட், காலிஃபிளவர் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். பச்சைப் பட்டாணியையும் கழுவி, நறுக்கிய காய்களுடன் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அவை வதங்கியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தனியே வைத்துள்ள காய்கள் பட்டாணியைப் போட்டு, நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் தூளை தூவி, உப்பைப் பொடி செய்துப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடி வைக்க வேண்டும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான குழம்பு போல கரைத்துக் கொள்ளவும். அடைக்கல்லில் சிறிது எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
கல் காய்ந்ததும் காய்கறி மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டி கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்துப் போடவும். வடையைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். அதன் ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்.
|
தேவையான பொருள்கள்
|
உருளைக்கிழங்கு
|
200 கிராம்
|
காரட்
|
200 கிராம்
|
காலிஃபிளவர்
|
200 கிராம்
|
பச்சைப்பட்டாணி
|
200 கிராம்
|
வெங்காயம்
|
200 கிராம்
|
பச்சை மிளகாய்
|
10 கிராம்
|
நல்லெண்ணெய்
|
300 கிராம்
|
இலவங்கப்பட்டை
|
2 |
பிரிஞ்சி இலை
|
2 |
மஞ்சள்பொடி
|
அரை டீஸ்பூன்
|
| மிளகாய்ப்பொடி |
ஒரு டீஸ்பூன்
|
கொத்தமல்லி
|
ஒரு கொத்து
|
கடலை மாவு
|
400 கிராம்
|
இலவங்கம்
|
4 |
உப்பு
|
தேவையான அளவு
|
கடுகு
|
ஒரு டீஸ்பூன்
|
|