|
முந்திரிப்பருப்பு வடை
செய்முறை
முந்திரிபருப்பை மேல் தோல் நீக்கி தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சுமார் 2 மணிநேரம் ஊறியபின், ஆட்டுரலில், மை போல் கெட்டியாக அரைக்க வேண்டும். அத்துடன் உப்பு சேர்த்து அரைத்து வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் நெய் அல்லது டால்டாவை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும் அரைத்த மாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட வேண்டும். இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விட வேண்டும். இதுவே முந்திரிப் பருப்பு வடை. இது சாப்பிட சுவையாய், மிருதுவாய் இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
முந்திரிபருப்பு
|
250 கிராம்
|
நெய் (அ) டால்டா
|
250 கிராம்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|