|
சுறா மீன் முட்டை கட்லெட்
செய்முறை
சுறா மீனை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன், பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு, உப்புப் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும். நன்றாகப் பிசைந்த பின், சிறுசிறு வடைகளாகத் தட்டி வைக்க வேண்டும்.
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்றாக அடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி வைக்கவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளை அடித்து வைத்த முட்டையில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போடவும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிட வேண்டும்.
|
தேவையான பொருள்கள்
|
சுறா மீன்
|
250 கிராம்
|
பச்சை மிளகாய்
|
4 |
பெரிய வெங்காயம்
|
1 |
முட்டை
|
2 |
| நல்லெண்ணெய் |
200 மி.லி.
|
கறிவேப்பிலை
|
சிறிது
|
கொத்தமல்லி
|
சிறிது
|
| உப்பு |
தேவையான அளவு
|
|