|
கடலைப் பருப்பு ஆம்லேட்
செய்முறை
கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து ஆட்டுரலில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு இவற்றை அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கடலை மாவை தோசை மாவு போல் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றவும். நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், மல்லித்தழை இவைகளையும், இஞ்சி, பூண்டு அரைத்ததையும் மாவில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
ஒரு தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். கல்காய்ந்ததும், கரைத்து வைத்த மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாய் ஊற்றவும். நன்றாக வெந்ததும் மறபுறம் திருப்பிப் போடவும். மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.
|
தேவையான பொருள்கள்
|
கடலைப் பருப்பு
|
400 கிராம்
|
முட்டை
|
3 |
பெரிய வெங்காய
|
3 |
பச்சை மிளகாய்
|
10 |
இஞ்சி
|
சிறு துண்டு
|
பூண்டு
|
1 |
கடலையெண்ணெய்
|
150 கிராம்
|
கொத்தமல்லி
|
2 கொத்து
|
உப்பு
|
தேவையான அளவு
|
|