|
வாழைப் பூ உருண்டை குழம்பு
செய்முறை
முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி வைக்கவும். துவரம்பருப்பு, கடலைபருப்பு இவற்றை அரைமணி நேரம் ஊறவைக்கவும். பருப்புகள் நன்கு ஊறியதும் தண்ணீரை சொட்டு கூட இல்லாமல் வடிகட்டி வைக்கவும். அம்மியில் மிளகாயை வைத்து நைசாக அரைக்கவும். மிளகாய் மசிந்ததும் சோம்பு, உப்பு வைத்து அரைத்து, வழித்து, வைக்கவும். வாழைப் பூவையும் தண்ணீர் இன்றி அரைக்கவும். வழித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். வடித்து வைத்துள்ள பருப்புகளை கரகரப்பாக அரைக்கவும். வழித்து, அரைத்துள்ள வாழைப் பூ, மிளகாய், சோம்பு, உப்பு ஆகியவற்றுடன் போடவும். வெங்காயம் தோல் போட்டோத்து பொடியாக அரிந்துக் கொள்ளவும். பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை இவைகள் அனைத்தையும் பொடியாக அரிந்து அரைத்து வைத்துள்ள வாழைப் பூ கலவையில் கொட்டவும். (வாழைப் பூ கோலாவுக்கு அரைக்கும் போது தண்ணீர் தெளிக்கக் கூடாது.) தேங்காய் மூடியை சன்னமாக துருவிப் போடவும். மஞ்சள் தூளைப் போடவும். நிலக்கடலையை இரண்டாக உடைத்துப் போடவும். நன்கு பிசைந்து ஒரு தாம்பாளத்தில் தனித்தனியாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை 4, 4 என்று போட்டு வறுத்து எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மறுபடி, மறுபடி நான்கு, நான்காக போட்டு வறுத்து எல்லாவற்றையும் வறுத்து வைத்து விடவும்.
மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள் உப்பு கலந்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடவும். குழம்பு மசாலா வாசனை போனதும், கசகசா, தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்க விடவும். சோம்பை நன்கு தூள் செய்துப் போடவும். மறுபடி தேங்காய் கொதி வந்ததும், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கசகசா அரை ஸ்பூன் இவற்றை அம்மியில் வைத்து தூள் செய்து வாணலியில் போடவும். சிவந்ததும், இஞ்சியை தோல் சீவி அலசி, அம்மியில் அரைத்து பிறகு பூண்டு வைத்து கரகரப்பாக அரைத்து வாணலியில் போடவும். பட்டையை சிறு துண்டுகளாகப் போடவும். கிராம்பை அம்மியில் தட்டிப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் மூன்று நீளத்தில் அரிந்து போட்டு வதக்கவும். வெங்காயம் மூன்று (பல்லாரி) தோலுரித்து நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்கவும். தக்காளியை நீளத்தில் அரிந்து போட்டு வதக்கவும். குழம்புடன் தாளிக்கவும். நன்றாக ஒரு கொதி வந்ததும், மறு கொதி வரும் சமயம் கறிவேப்பிலை, மல்லித்தழையை அம்மியில் வைத்து தட்டிப் போடவும். குழம்பை இறக்கி விடவும். வறுத்து வைத்துள்ள வாழைப் பூ உருண்டையை குழம்பில் போடவும். எடுத்து போட்டோமாறவும். இந்த வாழைப் பூ உருண்டை உடம்புக்கு நல்லது. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் அதிகமாக போவதை குறைக்கும். வயிற்றுப் புண்ணுக்கு ஏற்றது.
|
தேவையான பொருள்கள்
|
கோலாவுக்கு:
|
|
மொந்த வாழைப்பூ
(பெரியது)
|
ஒன்று
|
காய்ந்த மிளகாய்
|
5
|
துவரம் பருப்பு
|
100 கிராம்
|
| நிலக்கடலை |
100 கிராம்
|
சோம்பு
|
ஒரு ஸ்பூன்
|
பட்டை
|
ஒரு துண்டு
|
மஞ்சள் பொடி
|
ஒரு ஸ்பூன்
|
இஞ்சி
|
2 துண்டு
|
பூண்டு
|
1 |
| கறிவேப்பிலை |
5 கொத்து
|
மல்லித்தழை
|
5 ªè£ˆ¶ |
தேங்காய்த் துருவல்
(பெரிய மூடி)
|
ஒன்று
|
உப்பு
|
தேவையான அளவு
|
ok ஆயில்
|
250மி.லி.
|
வெங்காயம்
|
250கிராம்
|
குழம்புக்கு தேவையானவை:
|
|
மிளகாய்த்தூள்
|
ஒரு ஸ்பூன்
|
மல்லித்தூள்
|
3 ஸ்பூன்
|
தேங்காய் துருவல்
(பெரிய மூடி)
|
ஒன்று
|
சோம்பு
|
ஒரு ஸ்பூன்
|
பூண்டு
|
10 பல்
|
இஞ்சி (பெரியது)
|
1 துண்டு
|
கசகசா
|
4 ஸ்பூன்
|
| மஞ்சள் |
ஒரு துண்டு
|
மல்லித்தழை
|
2 கொத்து
|
கறிவேப்பிலை
|
1 கொத்து
|
எண்ணெய்
|
2 ஸ்பூன்
|
தக்காளி
|
4
|
உப்பு
|
தேவையான அளவு
|
|