|
மைதா அடை
செய்முறை
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைக்கவும். எள்ளை சிறிது தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, பச்சரிசி மாவு, நெய், சுத்தம் செய்த எள், தண்ணீரை வடித்தெடுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, தேவையான உப்பு, ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும். போட்டோ மாவு போல பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு உருண்டைகளாக உருட்டி, அடைகளாகத் தட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தட்டி வைத்துள்ள அடைகளைப் போட்டு, பதமாக வெந்ததும் எடுத்து விடவும். இதுவே மைதா அடை என்பது.
|
தேவையான பொருள்கள்
|
மைதாமாவு
|
250 கிராம்
|
| பச்சரிசிமாவு |
250 கிராம்
|
எள்
|
100 மில்லி
|
கடலைப்பருப்பு
|
100 கிராம்
|
பாசிப்பருப்பு
|
100 கிராம்
|
நெய்
|
100 கிராம்
|
எண்ணெய்
|
1/2 லிட்டர்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|