|
காலிபிளவர் சாப்ஸ்
செய்முறை
முதலில் காலிஃபிளவரை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை பெரிய அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய்வற்றல், சோம்பு, சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை 'மை' போல அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளையும், அரைத்து வைத்துள்ள மசாலாவையும், ஒன்றாகப் போட்டு, நன்றாகக் கிளறி வேகவிடவும். முக்கால் வேக்காடு வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, அத்துடன் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி, கலக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீர் விடாமல் முட்டையின் மஞ்சள் கருவிலேயே எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் காலிஃபிளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, கடலை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடவும். இதுவே 'காலிஃபிளவர் சாப்ஸ்'.
|
தேவையான பொருள்கள்
|
காலிஃபிளவர்
|
1 |
கடலை மாவு
|
100 கிராம்
|
முட்டை
|
1 |
மிளகாய்வற்றல்
|
3 |
மிளகாய் தூள்
|
1 டீஸ்பூன்
|
நல்லெண்ணெய்
|
200 கிராம்
|
சீரகம்
|
1/2 டீஸ்பூன்
|
சோம்பு
|
சிறிது
|
உப்பு
|
தேவையான அளவு
|
|