|
சேப்பங்கிழங்கு தேன்குழல்
செய்முறை
முதலில் சேப்பங்கிழங்கை கழுவி, சுத்தம் செய்து நன்றாக வேகவிட வேண்டும். வெந்ததும் இறக்கி சிறிது ஆறியதும் அதன் மேல் தோலை போட்டோத்து எடுத்து விட வேண்டும்.
அந்தக் கிழங்கை ஆட்டுரலில் வெண்ணை போல ஆட்டி, வழித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அத்துடன் அரிசிமாவு, வெண்ணெய், உப்பு, பொடி செய்த பெருங்காயம், சீரகம், எள் ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைய வேண்டும்.
ஒரு வாணலியில் கடலை எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை தேன் குழல் பிழியும் குழாயில் வைத்துப் பிழிய வேண்டும். தேன் குழலின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிடவும். இதுவே, சேப்பங்கிழங்கு தேன் குழல் என்பது. இது சாப்பிட மொறுமொறுவென்று மிகவும் சுவையாக இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
சேப்பங்கிழங்கு
|
250 கிராம்
|
பச்சரிசி மாவு
|
650 கிராம்
|
வெண்ணை
|
50 கிராம்
|
பெருங்காயம்
|
சிறு துண்டு
|
எள்
|
2 டீஸ்பூன்
|
சீரகம்
|
2 டீஸ்பூன்
|
மிளகாய்த்தூள்
|
1 டீஸ்பூன்
|
கடலை
எண்ணெய் |
500 மி.லி.
|
உப்பு
|
தகுந்த அளவு
|
|