|
அவரை பொரியல்
செய்முறை
முதலில் அவரையைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தாழையை கிள்ளி வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் முழுவதையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும். அவை நன்றாக வதங்கியதும், அத்துடன் நறுக்கி வைத்த அவரையைப் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, கிள்ளி வைத்துள்ள கொத்தமல்லியை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்க வேண்டும். இடையிடையே கிளறி வைக்கவும். அடுப்பை நிதானமாக எரியவிட வேண்டும். எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல்களை தூவி, கிளறி இறக்கி வைக்கவும்.
இதில் ஓர் எலுமிச்சம் பழத்தை நறுக்கிப் போட்டு சாறு பிழிய வேண்டும். இதுவே அவரை பொரியல்.
|
தேவையான பொருள்கள்
|
'பிரெஞ்சு பீன்சு'
(அவரைக்காய்)
|
250 கிராம்
|
வெங்காயம்
|
100 கிராம்
|
தேங்காய் மூடி
|
1 |
பச்சை மிளகாய்
|
4
|
| கொத்தமல்லி |
சிறு கட்டு
|
| நெய் |
50 கிராம்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|