|
சேனைக்கிழங்கு வடை
செய்முறை
சேனைக்கிழங்கை பொடிமாஸ் கட்டையில் வைத்து துருவிக் கொள்ள வேண்டும். பொரிக்கடலை உப்பு இரண்டையும் ஒன்றாக அம்மியில் போட்டு, கரகரவென்று அரைக்க வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைப் போடவும். அவை வெடித்து, பொன்னிறமாக வந்ததும், பொடியாக நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய். மல்லி, ஆகியவற்றை போட்டுப் நன்றாக வதக்க வேண்டும். பாதி வதங்கினதும் சேனைக் கிழங்கைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு வாணலியை கீழே இறக்கி, அரைத்து வைத்துள்ள பொரிக்கடலை மாவை அதில் கலந்து கொண்டு, பின் வேறொரு பாத்திரத்தில் அந்தக் கலவையைக் கொட்டி, பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் தேங்காய் எண்ணெயைக் கொட்டி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடையாகத்தட்டிப் போடவும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிட வேண்டும். இதுவே சேனைக்கிழங்கு வடை என்பது. இது சாப்பிட முறுமுறு வென்று சுவையாக இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
சேனைக்கிழங்கு (பெரியது)
|
1/2 கிலோ
|
பொரி கடலை
|
250 கிராம்
|
பச்சை மிளகாய்
|
10 |
பெரிய வெங்காயம்
|
2 |
தேங்காய்
|
1 மூடி
|
கடுகு
|
3 டீஸ்பூன்
|
உளுத்தம் பருப்பு
|
3 டீஸ்பூன்
|
நல்லெண்ணெய்
|
6 டீஸ்பூன்
|
தேங்காய் எண்ணெய்
|
1/2 லிட்டர்
|
கறிவேப்பிலை
|
சிறு கொத்து
|
கொத்தமல்லி
|
ஒரு கொத்து
|
உப்பு
|
தேவையான அளவு
|
|