|
ரவா கோவா
செய்முறை
முதலில், ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நெய் காய்ந்ததும், ரவையை அதில் போட்டு சற்று சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் மேலும் சிறிது நெய் விட்டு, முந்திரி பருப்பை வறுத்துக் கொள்ளவும். ஓர் எவர்சில்வர் பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைக்க வேண்டும். பால் நன்றாக கொதித்துக் கொண்டு இருக்கும் பொழுது வறுத்து வைத்துள்ள ரவையை அதில் கொட்டி, அடி பிடிக்காதபடி கிளறி விட வேண்டும். இந்தக் கலவை அல்வா பதத்தில் வரும் பொழுது கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை அதில் போடவும். பச்சைக் கற்பூரத்தை பொடி செய்துப் போட்டு மூடி வைக்க வேண்டும். சிறிது ஆறியதும் கேக்குகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதுவே ரவா கோவா என்பது. சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
ரவை
|
200 கிராம்
|
பால்
|
500 மி.லி.
|
| சீனி |
400 கிராம்
|
| நெய் |
100 கிராம்
|
பச்சை கற்பூரம்
|
சிறிது
|
முந்திரி பருப்பு
|
50 கிராம்
|
|