|
வள்ளிக் கிழங்கு அதிரசம்
செய்முறை
புழுங்கல் அரிசியை கல் நீக்கி சுத்தம் செய்து, களைந்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, அரை வேக்காட்டில் எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்துள்ள அரிசியை ஆட்டுரலில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேகவைத்துள்ள கிழங்கை (மேல்தோலை நீக்கி விட்டு) சேர்த்து அரைக்க வேண்டும். வெல்லத்தை பொடியாகத் தட்டி ஆட்டுரலில் மாவுடன் கலந்து அரைக்க வேண்டும். மாவு வெண்ணை போல் இல்லாமல் சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்த மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடியாகத் தட்டி மாவில் கலந்து பிசைந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அரைத்த மாவை சிறுசிறு வடைகளைப் போல ஒரு வாழை இலையில் தட்டி வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக எண்ணெயில் எடுத்துப் போட்டு, வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிட வேண்டும். இதுவே சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிரசம் என்பது.
தேவையான பொருள்கள்
|
புழுங்கல் அரிசி
|
400 கிராம் |
சர்க்கரை
வள்ளிக்கிழங்கு |
500 கிராம்
|
வெல்லம்
|
50 கிராம்
|
கடலை எண்ணெய்
|
1/2 லிட்டர்
|
ஏலக்காய்
|
6 |
உப்பு
|
இரண்டு சிட்டிகை
|
|