|
கேரட் கீர்
செய்முறை
முதலில் கேரட்டை கழுவி சுத்தம் செய்து கொண்டு பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும், ஆட்டுரலில் போட்டு மை போல அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். அதே ஆட்டுரலில் முந்திரிப் பருப்பையும், பாதாம் பருப்பையும் போட்டு வெண்ணை போல் அரைத்து, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடியாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதித்ததும் சீனியைக் கொட்டி, கிளறி விடவும். சீனி கரைந்து, பால் நன்றாகக் கொதித்து வருகையில் இறக்கி, அதில் அரைத்து வைத்துள்ள காரட், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - கலவை, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும். சிறிது ஆறியதும், ஒரு கோப்பையில் ஊற்றி குடிக்க வேண்டும். பாதாம் கீரைப் போல் இனிப்பாய், சுவையாய் இருக்கும். இதுவே கேரட்கீர்.
|
தேவையான பொருள்கள்
|
| கேரட் |
250 கிராம்
|
பால்
|
2 கோப்பை
|
முந்திரிப்பருப்பு
|
10 |
பாதாம்பருப்பு
|
4 |
சீனி
|
450 கிராம்
|
ஏலக்காய்
|
4 |
|