|
தாம்பூல பணியாரம்
செய்முறை
வறுத்து தோல் நீக்கிய பாசிப்பயிரை மிஷினில் கொடுத்து நைசாக அரைக்க வேண்டும். தேங்காயைத் துருவி, ஆட்டுக்கல்லில் தண்ணீர் ஊற்றி அரைத்து, பால் எடுத்துக் கொண்டு, அந்த தேங்காய்ப் பாலில் பொடி செய்த வெல்லத்தையும், 2 சிட்டிகை உப்பையும் போட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை மிஷினில் அரைத்த மாவுடன் கலந்து தோசை மாவு போல கரைத்துக் கொள்ளவும். இதில் ஏலக்காயைப் பொடியாகத் தட்டிப் போட்டு, முந்திரிப் பருப்பை துண்டுகளாக்கிப் போடவும். ஒரு சிறிய தாம்பூலத்தில் (வெற்றிலையில்) நெய்யைத் தடவி, அதில் கரைத்து வைத்துள்ள மாவை இட்லி போல ஊற்றி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். நன்றாக வெந்ததும், எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். இதுவே தாம்பூலப் பணியாரம்.
|
தேவையான பொருள்கள்
|
பாசிப்பயறு
(வறுத்து தோல் நீக்கியது)
|
500 கிராம்
|
வெல்லம்
|
250 கிராம்
|
முந்திரிப்பருப்பு
|
10 |
| ஏலக்காய் |
5 |
தேங்காய்
|
1 |
நெய்
|
200 கிராம்
|
| உப்பு |
2 சிட்டிகை
|
|