|
வாழைத்தண்டு உருண்டை
செய்முறை
முதலில் வாழைத்தண்டை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். வெந்தபின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி வைத்தக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவல், வாழைத்தண்டு, பொரிக்கடலை, இஞ்சி, கசகசா, சோம்பு தேவையான உப்பு ஆகியவற்றை ஆட்டுரலில் போட்டு, லேசாக தண்ணீர் விட்டு, சுமாராக அரைக்க வேண்டும். அரைத்தபின் வழித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு, ஆகியவற்றை பொடியாக அரிந்து போட்டு, பட்டை, கிராம்பை தட்டிப் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிசைந்துள்ள வாழைத்தண்டு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுத்துவிடவும். இதுவே வாழைத்தண்டு உருண்டை!
தேவையான பொருள்கள்
|
வாழைத்தண்டு
|
2 அடி நீளம்
|
தேங்காய்
|
1/2 மூடி
|
பொரிக்கடலை
|
150 கிராம்
|
கசகசா
|
5 டீஸ்பூன்
|
சோம்பு
|
3 டீஸ்பூன்
|
பட்டை
|
சிறிது
|
கிராம்பு
|
சிறிது
|
பச்சை மிளகாய்
|
10 |
பெரிய வெங்காயம்
|
3 |
எண்ணெய்
|
100 கிராம்
|
வெள்ளைப் பூண்டு
|
3 |
இஞ்சி
|
சிறு துண்டு
|
| கறிவேப்பிலை |
சிறு கொத்து
|
உப்பு
|
தேவையான அளவு
|
|