கறி பஜ்ஜி
செய்முறை
ஆட்டு இறைச்சியை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அத்துடன் வெங்காயத்தை தோலுரித்து, இஞ்சி, பூண்டு இவைகளை தட்டி கறியில் போடவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். மல்லித்தழையை பொடியாக அரிந்துப் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றவும். மிளகாய்த்தூள் போட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைக்கவும். கறி நன்றாக வெந்து கொண்டிருக்கும். இதற்கு இடையில், ஒரு பாத்திரத்தில் கடலை மாவையும், சிறிது நெய்யையும், அத்துடன் ஒரு சிட்டிகை சோடா மாவு போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி குழம்பு போல் கரைத்து, கறி வெந்து மசாலா சுண்டி வரும் போது, பாத்திரத்தை கீழே இறக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கறி மசாலாவை வடை போல் தட்டி, கடலைமாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். சிவக்க வெந்தவுடன் எடுத்து விடவேண்டும்.
தேவையான பொருள்கள்
|
ஆட்டு இறைச்சி
|
250 கிராம்
|
| பட்டை |
2 |
இலவங்கம்
|
2 |
இஞ்சி
|
ஒரு துண்டு
|
பூண்டு பெரியது
|
3 பல்
|
கறிவேப்பிலை
|
1 கொத்து
|
| நெய் |
ஒரு டீஸ்பூன்
|
நல்லெண்ணெய்
|
250 மி.லி.
|
பெரிய வெங்காயம்
|
1 |
| மிளகாய்த்தூள் |
3 டீஸ்பூன்
|
கடலை மாவு
|
200 கிராம்
|
மல்லி
|
சிறு கொத்து
|
| சோம்பு |
ஒரு டீஸ்பூன்
|
| மஞ்சள்தூள் |
சிறிது |
உப்பு
|
தேவையான அளவு
|
|