|
தேங்காய் அல்வா
செய்முறை
பச்சரிசி, தேங்காய் துருவல் இவற்றை (அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.) ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைத் துணியில் போட்டு வடிகட்டி, தண்ணீர் தெளித்து, பால் பிழிந்து எடுக்கவும். அந்தப் பாலை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு மணி நேரம் தெளிய வைத்து மேலே தெளிந்துள்ள நீரை வடித்து விட்டு, அதில் சீனியைக் கொட்டி, அடுப்பில் வைக்கவும். பால் கொதித்து கெட்டியாக வரும். ஒரு கரண்டியால் அடிபிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டுக் கிளற வேண்டும். நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றிக் கிளறிவிட வேண்டும். (தேவையானால் கிஸ்மிஸ்பழம் போடலாம் முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்து கிளறும் அல்வாவில் போடலாம்.) இதுவே தேங்காய் அல்வா.
|
தேவையான பொருள்கள்
|
தேங்காய்த் துருவல்
|
300 கிராம்
|
பச்சரிசி
|
400 கிராம்
|
சீனி
|
300 கிராம்
|
| ஏலக்காய் |
3 |
| நெய் |
5 தேக்கரண்டி
|
|