|
இனிப்பு அணுகுண்டு
செய்முறை
முதலில் கோதுமையை மிஷினில் கொடுத்து தீட்டி வந்து புடைக்க வேண்டும். புடைத்த கோதுமையை 2 மணிநேரம் ஊறவிடவும். ஊறியதும், நீரை வடித்து விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இத்துடன் கால் கிலோ வெல்லம் போட்டு அரைக்கவும். அரைத்து வழித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். எள்ளை வறுத்து தண்ணீரில் கொட்டி அரித்து கல் நீக்கி, ஊறவைத்து, மேல் தோலை நீக்கி விட்டு, எள்ளு, பொட்டுக் கடலை, மீதியுள்ள அரைக் கிலோ வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும், அதில் தேங்காயை சிறுசிறு பல்லாக கீறிப் போடவும். இவை எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து, அத்துடன் ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டு இத்துடன் கசகசாவை வறுத்து (லேசாக) அதில் கலந்துப் போட்டு பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அரைத்து கரைத்த மாவில் உப்பு கலந்து, கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் இடித்து வைத்துள்ள எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், தேங்காய்ப் பல்லு, ஏலக்காய்ப்பொடி, இவைகளை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அரைத்து வைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். சிவக்க வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். இதுவே இனிப்பு அணுகுண்டு என்பதாகும்.
|
தேவையான பொருள்கள்
|
கோதுமை
|
400 கிராம்
|
எள்ளு
|
250 கிராம்
|
பொட்டுக்கடலை
|
200 கிராம்
|
வெல்லம்
|
750 கிராம்
|
தேங்காய் எண்ணெய்
|
1 லிட்டர்
|
ஏலக்காய்
|
15 |
தேங்காய்
|
1 |
| கசகசா |
25 கிராம்
|
|