|
மீன் வடை
செய்முறை
தயிரிலிருந்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். மீனை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும். நன்றாக வெந்ததும், மீனை தனியே எடுத்து உலர்த்தவும். பிறகு அதிலுள்ள முட்களை அகற்றிவிட்டு, மை போல அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், கசகசா, லவங்கம், பட்டை, வறுத்த கடலை பருப்பு, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, மசிய அரைக்க வேண்டும்.
அரைத்தபின் எடுத்து, அரைத்த மீனுடன் கலந்து பிசைந்துக் கொள்ள வேண்டும். தயிரை அதில் கொட்டிக் கொள்ளவும். மிளகாய்த்தூளைப் போடவும். இஞ்சியை பொடியாக அரிந்து போடவும். பிசைந்துக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பாதியளவு எடுத்து மீன் கலவையில் கலந்து பிசைந்துக் கொள்ளவும். மீதியுள்ள வெள்ளைக் கருவை தனியே வைத்துவிடவும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மீன் கறியை வடைகளாகத் தட்டி, வெள்ளைக் கருவில் தேய்த்து நெய்யில் போடவும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். இதுவே மீன் வடை. சாப்பிட சுவையாய் இருக்கும். மாலை நேர காப்பியுடன் சாப்பிட ஏற்றது.
|
தேவையான பொருள்கள்
|
விறால் மீன்
|
2 |
தயிர்
|
2 கோப்பை
|
மிளகாய்ப்பொடி
|
2 டீஸ்பூன்
|
| மிளகு |
1 டீஸ்பூன்
|
வறுத்த கடலைப்பருப்பு
|
150 கிராம்
|
முட்டை
|
3 |
லவங்கம்
|
5 |
| பட்டை |
2 துண்டு
|
நெய்
|
400 கிராம்
|
| இஞ்சி |
பெரிய துண்டு
|
உப்பு
|
தேவையான அளவு
|
|