|
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
செய்முறை
முதலில் மாங்காய்களை சுமார் 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு அவற்றை எடுத்து ஈரம் போக துடைத்து உலரவிடவும். பிறகு ஒவ்வொரு மாங்காயையும் 16 துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கொட்டைகளையும் சிறிது சதைகளுடன் போட்டு வைக்கவும். இந்த மாங்காய் துண்டுகளை ஈரம் இல்லாத பெரிய பீங்கான் ஜாடியில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பலமுறை குலுக்கி வைக்க வேண்டும். சுமார்2 மணி நேரம் கழித்து, இதில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, ஆகியவற்றைப் போட்டு கிளறி விடவும். சிறிது நேரம் கழித்து சீரகத்தூள், வெந்தயத்தூள் போட்டு நன்கு கிளறிவிட வேண்டும். சுமார் 20 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் போட வேண்டும். இவைகள் எல்லாம் போட்டு நன்றாகக் கிளறி வைக்க வேண்டும். மறுநாள் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தை தட்டிப் போட்டு, பொரித்து, இறக்கி வைத்து, ஆறியதும் மாங்காய் துண்டங்களில் ஊற்றவும். மறுபடி 75 கிராம் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போடவும். அவை வெடித்ததும் இறக்கி ஆறவைத்து மாங்காய் துண்டுகள் மீது ஊற்றவும். நன்றாக குலுக்கி விடவும். இதுவே ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்.
|
தேவையான பொருள்கள்
|
| மாங்காய் |
50 |
உப்பு
|
900 கிராம்
|
மிளகாய்த்தூள்
|
650 கிராம்
|
கடுகுத்தூள்
|
80 கிராம்
|
அரைத்த இஞ்சி
|
150 கிராம்
|
அரைத்த பூண்டு
|
150 கிராம்
|
சீரகத்தூள்
|
30 கிராம்
|
வெந்தயம் (வறுத்தது)
|
30 கிராம்
|
நல்லெண்ணெய்
|
75 கிராம்
|
பெருங்காயம்
|
5 கிராம்
|
பூண்டு (பல்லாக போட்டோத்தது)
|
80 கிராம்
|
மஞ்சள் தூள்
|
1/4 டீஸ்பூன்
|
கடுகு
|
15 கிராம்
|
கொண்டக்கடலை
(ஊறவைத்தது)
|
80 கிராம்
|
|