|
உருளைக்கிழங்கு சப்பாத்தி
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து ஆற வைத்து, மேல் தோலை போட்டோத்துக் கொள்ள வேண்டும். கிழங்குகளை ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் விழுதாக அரைத்து, பிசைந்து வைத்துள்ள உருளைக் கிழங்குகளுடன் கலந்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் தூளையும் கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 மேசைக்கரண்டி நெய், தேவையான உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அப்பளங்களாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு அப்பளத்தின் மேல் பிசைந்து வைத்துள்ள, உருளைக் கிழங்கை சிறிது எடுத்து பரவலாக வைத்து அதன் மேல் மற்றொரு அப்பளத்தை வைத்து ஓரங்களை ஓட்டிவிடவும். அடைக்கல்லை அடுப்பில் வைத்து, நெய் தடவவும். கல்காய்ந்ததும், சப்பாத்தியைப் போட்டு, அதன் மேலும், சுற்றிலும் நெய்யை தடவினாற்போல் ஊற்றவும். சப்பாத்தியின் ஒரு புறம் நன்றாக வெந்ததும் திருப்பிப் போடவும். மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
|
தேவையான பொருள்கள்
|
உருளைக்கிழங்கு
|
400 கிராம்
|
பச்சை மிளகாய்
|
10 |
கோதுமைமாவு
|
450 கிராம்
|
நெய்
|
250 கிராம்
|
மஞ்சள் தூள்
|
1/2 டீஸ்பூன்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|