|
வாழைப்பழ அல்வா
செய்முறை
முதலில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் இவற்றை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை போட்டோத்து போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். ஓர் அகலமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி கரைத்து, அடுப்பில் வைக்கவும். சீனி கரைந்து பாகாக வரும். பாகு கம்பி பதத்தில் வரும் பொழுது, பிசைந்து வைத்தள்ள வாழைப் பழங்களைப் போட்டு கிளற வேண்டும். பிறகு நெய் முழுவதையும் கொட்டி நன்றாக கிளறிவிட வேண்டும். அல்வா பதத்தில் வந்ததும், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்பழம், ஏலக்காய்ப்பொடி இவைகளைப் போட்டு நன்றாகக் கிளறிவிடவும். பதமாய் வந்ததும், இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி நன்கு பரப்பி, கேக்குகளாக வெட்டிக் கொள்ளவும். இதுவே வாழைப் பழ அல்வா. இது ஜீரணத்திற்கு ஏற்றது.
|
தேவையான பொருள்கள்
|
வாழைப்பழம்
|
25 |
| சீனி |
250 கிராம்
|
ஏலக்காய்ப் பொடி
|
ஒரு டீஸ்பூன்
|
முந்திரிப்பருப்பு
|
20 |
கிஸ்மிஸ் பழம்
|
25 |
நெய்
|
100 கிராம
|
|