Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
கவிஞர் பா.விஜய்

படம் : ஆட்டோகிராப்
பாடல் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
பாடலாசிரியர் : பா.விஜய்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உண் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு


*************************************************************************************************************************************************************

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். பா.விஜய்இவர் தந்தையார் பெயர் வி.பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார். இவருடைய படைப்புகளை கற்பகம் புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.

இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 300 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். மு.கருணாநிதி அவர்கள் வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தமது கலையுலக வாரிசாக பா.விஜய் அவர்களை அறிவித்து பெருமையளித்துள்ளார்.

கவிஞர் பா.விஜய் நடித்த படங்கள்:

1. ஞாபகங்கள்
2. இளைஞன்

கவிஞர் பா.விஜய் பெற்ற விருதுகள்:

சினிமா எக்ஸ்பிரஸ் விருது - 2000
தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது - 2001
ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது - 2001
வெரைட்டி விருது - 2001
பாலர் ஜூனியர் சேம்பர் விருது - 2001
லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது - 2002
தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது - 2002
சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது - 2003
வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது - 2003
சன் பீம் கல்வி நிறுவன விருது - 2003
ட்ரைனிட்டி விருது - 2004
பாட்டருவி விருது - திருவள்ளுவர் மன்றம் கர்நாடகம் - 2004
தன்னம்பிக்கையாளர் விருது - 2004
த.மு.எ.ச. துறைமுகம் விருது - 2004
தேசிய விருது - 2004
தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது - 2005
பாரத் அசோசியேஸன் விருது - 2005
ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது - 2005
எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது - 2005
சென்னை நண்பர்கள் விருது - 2005
வெரைட்டி விருது - 2005
தினகரன் விருது - 2005
பிலிம் டுடே விருது - 2005
எம்.ஜி.ஆர். விருது - 2006
மலேசிய ஜி.எம்.டி. விருது - 2006
தஞ்சை செங்குந்தர் மகாசன விருது - 2006
செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது - 2006
கÏர் ரோட்டரி கிளம்ப்பின் மொழிக்காவலர் விருது - 2006
கலைமாமணி விருது - 2007
ராஜீவ்காந்தி – மூப்பனார்விருது - 2007
கலைவித்தகர் - கண்ணதாசன் விருது - 2007
இளம் கவியரசர் விருது - கனடா - 2007
பாரத் சினி விருது - 2007
எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது - 2008
திரை இசை விருது - 2008
ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த தொலைக்காட்சி பாடலாசிரியருக்கான விருது - 2008
பிலீம்பேர் விருது - 2008

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter