|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
தா.பாண்டியன் பிரத்யேக பேட்டி
இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்ததுண்டா?
-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேள்வி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டின். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருடைய ஆங்கில புலமைக்கு டெல்லியே அடிமையாக இருந்த காலமெல்லாம் உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான இவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்-

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது

இந்திய, அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில், ஆரம்பகட்டத்தில் tha pandianஇருந்தே இந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தக்கூடாது என்று எங்கள் கட்சி எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களையும், பின்விளைவுகளையும் சுட்டிகாட்டி வந்துள்ளது. ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தப் போக்கை இடது சாரி தலைவர்கள் கண்டிக்கின்றனர். மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தால் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டுமென்று இடதுசாரிகட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இடதுசாரி கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய கருத்துக்களின் பேரில்தான் மத்திய அரசு பின்வாங்கியுள்ளதா?

மத்திய அரசு இடதுசாரி கட்சிகளை சமாதனப்படுத்தும் முயற்சிகளை எடுத்தாலும், இடதுசாரி கட்சியின் தேசிய தலைவர்கள் தாங்கள் எடுத்தமுடிவின்படி உறுதியான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தினால், மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாக அறிவித்ததே?

மத்திய அரசு தனது உறுதியான முடிவை அறிவிக்க தயங்கியது. எனவே, இடது சாரி கட்சித்தலைவர்கள், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. மேலும், ஆதரவு அளிக்கும் நிலையை ஒரு சலுகையாக கருதிவிடக்கூடாது என்ற கருத்தையும் இடதுசாரி தலைவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

தேசிய அளவில் மாற்று அணியை, அதாவது 3-வது அணியை உருவாக்குவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் கூறியிருந்தாரே?

அப்படியல்ல. அது மாற்று கருத்து உடையோர் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைக்கு குரல் எழுப்பவேண்டும் என்ற அடிப்படையில் அந்த கருத்து எழுப்பப்பட்டது. 3-வது அணி ஏற்படுவதற்கான காலம் இன்னும் கனிந்துவிடவில்லை.

சேதுசமுத்திர திட்டத்தை மாற்றுபாதையில் நிறைவேற்றப்படவேண்டுமென்று பா.ஜ.க. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறதே?

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆரம்ப கட்டத்திலிருந்தே பல tha pandianமுட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. முதலில் கடலுக்கு அடியில் பவழப் பாறைகள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் இருப்பதால், அவை அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் பிரச்னையை எழுப்பினார்கள். இதுதொடர்பாக 127 புகார்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், கடல் ஆராய்ச்சி நிபுணர்கள், இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதால், அவைகள் அழியாது என்று பல விளக்கங்கள் அளித்தனர். அதன்பின் இயற்கை ஆர்வலர்களுக்கு அந்த சந்தேகங்கள் தீர்ந்தது. தற்போது, ராமர்பாலத்தை முன்வைத்து மதவாத சக்திகள் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளனர். பொருளாதார ரீதியாக பலனளிக்கக்கூடிய இந்த திட்டத்தை மத்திய அரசு தாமதமின்றி நிறைவேற்றவேண்டும்,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கடத்தும் சம்பவங்களும் தொடர்கிறதே?

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை துன்புறுத்துவதும், சுட்டுக்கொல்வதும், அவர்களது படகுகளை பறித்துக்கொண்டு, இலங்கைக்கு கடத்தி செல்லும் சம்பவங்களும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவங்களை தடுப்பதற்கு இந்திய கடல்படை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுவரை இலங்கை மீனவர்களை ஒருமுறை கூட இந்திய கடற்படை கைது செய்தது உண்டா? தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்லும்போது, இந்திய கடற்படை ஏன் தடுக்கவில்லை?

இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதே?

இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இதில் மத்திய அரசு தலையிட்டு, அங்கு வாழும் தமிழர்களின் குடியுரிமை பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்படவேண்டும். மேலும், இலங்கையில் அமைதி திரும்புவதற்கான பேச்சுவார்தையும் நடத்தப்படவேண்டும். இதுகுறித்து இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.

சந்திப்பு -ராஜா

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter