Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
மரண தண்டனையே வேண்டாம்
வைகோ, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் வேண்டுதல்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் உண்ணாநிலை அறப்போராட்டம் இருந்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதேமில்லத் கல்லூரி அருகே நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வைகோ தொடங்கி வைத்தார். மாலை தா.பாண்டியன் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்...

காலையில் வைகோ பேசியதாவது...

தமிழகத்தில் மரண தண்டனையை முற்றாக ஒழிக்கவும், மூன்று தமிழர்களின் தூக்கு பழ.நெடுமாறன்தண்டனையை தடுத்து நிறுத்தவும், இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் உண்ணாவிரத அறப்போராட்டம் அண்ணன் நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

137 நாடுகளில் தூக்கு தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. ''தூக்கு தண்டனை என்பது திட்டமிட்டு கொலை செய்வதற்கு சமம்'' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரே தெரிவித்துள்ளார். ''பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் கூடாது'' என்று அண்ணால் காந்தியடிகள் சொல்லியுள்ளார். ஆகவே, தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 30 அன்று தூக்கு தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த நாளில் கட்சி பாகுபாடின்றி தமிழக மக்கள் அனைவரும் பெரும் திரளாக வந்திருந்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்டிருக்கும். அவ்வளவு அமைதியாக காந்திருந்தனர். ஆனால், இந்த வழக்கை சென்னையில் நடத்தாமல், வேறு மாநிலத்தில் நடத்த மனு செய்துள்ளார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.

நரேந்திர மோடிக்கு தீர்ப்பு வந்தபோது கூட, பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பி கொண்டாடினர். இது தவறு இல்லையா. ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு என்ன பதில். இந்த மூன்று தமிழர்களுக்கு அந்த சம்பவத்தில் சம்பந்தமே கிடையாது என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.

ஆனால் இந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு பழ.நெடுமாறன்முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால், நாங்கள் தெருத் தெருவாக சென்று முந்தைய காங்கிரஸ் அரசு மக்களுக்கு செய்த துரோகத்தை சொல்லி தூக்கு கயிறை அறுத்தெறிவோம் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. தூக்கு தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும்.

தமிழக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் போட்டு அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதை அவர் குடியரசுத் தலைவர் அனுப்புவார். நிராகரித்த மனுவை திரும்ப ஏற்பதில் குடியரசுத் தலைவருக்கு எந்த தடையும் கிடையாது. அதனால் தமிழக அரசு இந்த மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முன்வர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

பழ.நெடுமாறன் பேசியதாவது...

இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்துக்கு திரளாக வந்து ஆதரவை தந்துகொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

மத்திய அரசுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும் இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டுமென்று ஏன் இப்படி துடிக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று இரத்தத்தை குடித்தும் இன்னும் தாகம் அடங்கவில்லை போல..

மூன்று தமிழர்களின் உயிரை காக்கும் வரை ஓய்வில்லை உறக்கம் இல்லை. அவர்களை காக்க வேண்டியது நம் தலையாய கடமை. மத்திய அரசின் சதியை முறியடித்து மூவர் உயிரையும் காப்போம்.

மேலும், வைகோ பேசியதை சுட்டி காட்டி பேசினார். மற்றும் இந்த உண்ணாவிரத்திற்கு துணையாக இருந்த ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி நன்றி தெரித்தார்.

மாலையில் தா.பாண்டியன் பேசியதாவது...

மூவர் தூக்கு தண்டனைக்கு விதித்த இடைக்கால தடை முடிய போகிறது. காலம் பழ.நெடுமாறன்நெருங்கிகொண்டு இருக்கிறது.போராட்டத்தை பெருகப்பண்ண வேண்டும். கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனை பற்றி மத்திய அரசிடம் பேச போகும் தமிழக முதல்வர் மூவர் உயிரை காப்பற்றுவது பற்றி பேசுவதாக இருந்தால் நாங்களும் வருகிறோம் உங்களுக்கு துணையாக...

காந்தியை கொன்றவன் கோட்சே. அவனுக்கு முழு அளவில் துணை புரிந்தது கோபால் கோட்சே. கோட்சேயை தூக்கிலிட்டனர். கோபால் கோட்சேயை 12 வருடங்களுக்கு பிறகு விடுதலை செய்துவிட்டார்கள். அவன் புத்தகம் எழுதி உள்ளான். நான் ஏன் காந்தியை கொன்றேன் என்றும், மற்றொரு புத்தகத்தில் இனி காந்தி பிறந்தால் மீண்டும் கொல்வேன் என்றும் எழுதி உள்ளான். இந்த வேலையை டெல்லியில் இருந்தே செய்கிறான். அவனை ஒன்னும் செய்யாமல் இருக்கிற மத்திய அரசு.

இயேசு மலையிலிருந்து உயிர்களிடத்தில் அன்பு காட்டுங்கள் என்று பேசினாராம் நாங்கள் அதை பார்க்கவில்லை ஆனால் எங்கள் பேரறிவாளன் ஒரு கடிதத்தில் எழுதி உள்ளான்.  தூக்கு தண்டனையால் சாவது நானே கடைசியாக இருக்கட்டும். மற்றவர்களிடமாவது கருணை காட்டுங்கள் என்று எவ்வளவு  வேதனைப்பட்டு எழுதி இருப்பான் . அவன் காக்கப்பட வேண்டும் . காப்போம்.

-தமிழ்தாசன்..,

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
பாலை
Fans Banners
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter