|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிகவும் வலுவாக இருந்தபோது, கிழக்கு மாகாண பொறுப்பை முரளிதரன் என்ற கருணா கவனித்து வந்தார். வரி வசூல் பணத்தை கொள்ளையடித்து, முறைகேடாக செயல்பட்டதால் அவரிடம் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் விளக்கம் கேட்டார். இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர், விடுதலைப் புலி அமைப்புக்கு துரோகம் செய்து விட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டார்
உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக திகழ்ந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் சொன்னதை வேதமாக தமிழ் மக்கள் ஏற்றுச் செயல்பட்டனர். கட்டுக்கோப்பான இயக்கமாகவும் அது செயல்பட்டது. அவர்கள் செய்த ஒரே தவறு, மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் அதே ரீதியில் சண்டையிட்டதே என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய...
இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும் மரண பீதி விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில் கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமெண்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும் தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர்களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக் கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே....
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகில் உள்ள புலியூர் என்ற இடத்தில் 1984 வருடம் முதல், 1986 வரையில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாம் இருந்துள்ளது. இங்கு நான்கு பருவங்களில் 2,800 விடுதலைபுலிகள் இங்கு பயிற்சி எடுத்து விட்டு சென்றுள்ளார்கள். இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான் வீர மரணமடைந்த பின்னர் அவரது நினைவாக இங்குள்ள பொதுமக்கள் தங்களின் ஊர் பிரிவில்...
இலங்கையில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகவிஞர் காசி ஆனந்தன் எழுதிய காசி ஆனந்தன் நறுக்குகள் (இரண்டாம் தொகுப்பு), பொழிச்சல் (புதுக்கவிதை உரை இலக்கியமே - ஆய்வு) (பேஃபிள்ஸ் - காசி ஆனந்தன் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகிய 3 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் நடைபெற்றது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், திராவிட இயக்க ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள், ஓவியர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனைவாதிகள், இலங்கை தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள், மாணவர்கள், மேலும், கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத அமைப்புகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் கலந்து கொண்டு மரண தண்டனைக்கு எதிரான தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் உண்ணாநிலை அறப்போராட்டம் இருந்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கல்லூரி அருகே நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வைகோ தொடங்கி வைத்தார்
இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 22.09.2011 தேதியிலிருந்து சென்னை கோயம்பேடு பகுதியில் மரண தண்டனை
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க பல்வேறு அமைப்புகள் நடை பயணங்கள், பிரச்சாரம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை மெரீனா கடற்கரையில் தூக்குத் தண்டனைக்கு எதிரான மணற்சிற்ப கண்காட்சி ஞாயிறு(18.09.2011) மாலை நடந்தது. ஓவியக்கல்லூரி மாணவர்களும், பிரபல....
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை:
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடுவதைக் கண்டித்து திரையுலகினரை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். மூன்று பேரையும் தூக்கிலிட இன்று தேதி குறித்துள்ளது வேலூர் சிறை நிர்வாகம். இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சங்க அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஹெட்லைன்ஸ் டுடே  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்ச அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் சிறிலங்க அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கியமாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்து அரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழு கூடுகின்ற அரங்கில், ஜூன் 1 புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெற்றது. ( English - Tamil )
ஐநா போர் குற்ற விசாரனைக்கு ஆதரவாகவும், இலங்கை முள்வேளி கம்பிகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வேலூரில் மே 18 அன்று நடந்தது
"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது. பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களாகிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். இந்த படுதோல்வியின் காரணமாக அவமானம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அதிகாரபூர்வ அறிக்கை வெளிவந்துள்ளது. வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
கோஷத்திற்கும் முழக்கத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம். ஈழ விடுதலைக்கான குரல் மட்டுமல்ல, தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும்
படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் சம்பந்தமேயில்லாமல் 'திடீர்' சேகுவாராக்கள் உருவாகிக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், படைப்பை போலவே பேச்சும், பேச்சை போலவே படைப்பையும் கொண்டிருக்கிறார் கௌதமன். கத்தியின் வலிமையும், பிளேடின் கூர்மையும் இருக்கிறது அவரது பேச்சில்! ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்று தொலைக்காட்சி வரலாற்றில் புதிய வாள்வீச்சை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டின். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருடைய ஆங்கில புலமைக்கு டெல்லியே அடிமையாக இருந்த காலமெல்லாம் உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான இவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்
மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.
Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter