|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஓர் அரசியல்வாதியின் பார்வையில் தமிழ் சினிமா
திரு. அறந்தை நாராயணன்

மக்களின் சமுதாய, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்திமிக்க ஊடகமாக மாறிவிட்ட சினிமா, தமிழ்நாட்டில் தனது முத்திரையை மிக அழுத்தமாகவே பதித்துள்ளது. பேரறிஞர் அண்ணா முதல் செல்வி ஜெயலலிதா, இன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி வரை அனைவரும் திரைப்படத்துறையோடு தொடர்பு கொண்டவர்களே எனும் உண்மையை உணரும் போது, தமிழ் சினிமா, தமிழக அரசியலில் கொண்டுள்ள பெரும் தாக்கத்தை யூகிக்க முடிகிறது. தமிழ்த்திரைப்பட வரலாற்றை நோக்கும்போது, ஆரம்ப காலம் முதலே தமிழ்த்திரைப்படங்கள், ஏதேனும் உரு விதத்தில் அரசியலோடு தொடர்பு கொண்டிருந்ததை அறியமுடிகிறது.

விடுதலை போராட்ட காலத்தில் இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா. இதை இந்தி மொழியில் தயாரித்த பம்பாய்;க்காரர் அர்தேஷிர் இராணி என்பவர் அதே படப்பிடிப்பு தளத்தில், அதே ஆண்டு காளிதாஸ் என்னும் முதல் தமிழ்பேசும் படத்தை உருவாக்கி தமிழ்நாட்டிற்கு அனுப்பினார். உண்மையில் தமிழ்-தெலுங்கு இரு மொழிகளிலும் முதல் பேசும் படம் இதுதான்.

1931 அக்டோபர் 31 ஆம் நாள் வெளிவந்த அந்த காளிதாஸ் படத்தில் ஒரு பாடலில் மகாத்மா காந்தியின் கைராட்டினமும், கதர் ஆடையும் புகழப்பட்டன. சுதந்திர போராட்டக் காலத்தில் தமிழ் நாடகமேடை நடிகர்கள் சொந்த உத்வேகத்தில் தேசபக்தி பாடல்களை நாடகங்களிலும் புராணகதைகளிலும் பாடினார்கள். அதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை சந்தித்தார்கள். இவர்களிள் எஸ்.ஜி. கிட்டப்பா, விஸ்வநாத தாஸ், கே.எஸ். ஆனந்த நாராயணய்யர், ஹார்மோனியம் வாசுதேவநாயர், பாலக்காடு கே.பி. வாசுதேவன்,டீ.கே.சண்முகம், கே.பி.சுந்தராம்பாள், கே.பி. ஜானகி, டி.எம். கமலவேணி, எம்.எஸ்.விஜயாள், டி.பி.ராஜலட்சுமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

செல்லுலாய்ட் ஃபிலிம், தமிழில் பேசவும், பாடவும் தொடங்கியபோது நாடக நடிகர்களில் பலர் சினிமாவிற்கு வந்தனர். மேடைகளில் பாடிய தேசபக்தி பாடல்களை சினிமாவிலும் பாடினார்கள். புராணக் கதைகள், கர்ண பரம்பரை கிராமிய கதைகளை கொண்ட படங்களிலும் அந்த பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டன. காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி இந்த நடிகர்களில் பலரை பொதுக்கூட்ட மேடைகளில் பாடச்செய்து உற்சாகமூட்டினார். சினிமாவுக்கென தனியாக திரைக்கதைகள் தயாரிக்க தொடங்கிய காலத்தில் லட்சுமி அல்லது ஹரிஜனப்பெண், பால யோகினி, ஸ்வர்ணலதா, சேவா-சதனம், மாத்ருபூமி, தியாகபூமி போன்ற படங்கள் சுதந்திர போராட்ட லட்சியங்களை பிரச்சாரம் செய்தன. அந்நாளில் உருவாக்கி யவர்களில் பிரபலமானவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம்; ஆவார்.

பி.யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜபாகவதர் நடித்த படங்கள் விளம்பர வெளிச்சத்தால் வருடக்கணக்கி;ல் ஓடின. பாகவதரின் ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளை சந்தித்தது. இவர்களது பெயர்களால் முடியலங்காரங்கள் தோன்றின. பாகவதர் கிராப், சின்னப்பா கிராப், பாகவதர் சில்க் ஜிப்பா, பாகவதர் ஜவ்வாது போன்றவை சந்தைக்கு வந்தன.

இவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் தங்களை இணைத்துக் கொள்ளாததாலும், இவர்களது பெயர்களால் ரசிகர் மன்றங்கள் தோன்றாததாலும் இவர்களுக்கென்று தனி ஆளுமை உருவாகவில்லை. சுதந்திரத்திற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியில் இரு பெரும் கோஷ்டிகள் இருந்தன. எஸ்.சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எதிரெதிராக நின்றிருந்தனர்.இவர்களில் எஸ்.சத்தியமூர்த்தி வழக்கறிஞ்ராக இருந்துகொண்டே தொழில் முறையில்லாத நாடக குழுவில் இருந்தவர். மனோகரா நாடகத்தில் நடித்து புகழ் பெற்றவர். எனவே இவர் இயல்பாகவே கலைஞர்களிடம் நட்பு கொண்டிருந்தார். சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியின் தேசபுனரமைப்புத் திட்டங்களான ஜமீன்தார் ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மதுவிலக்கு, ஆரம்ப கல்வி போன்ற லட்சியங்களை பிரச்சாரம் செய்ய 1949 ஆம் ஆண்டில் என்.எஸ். கிருஷ்ணன் நல்ல தம்பி என்னும் படத்தை உருவாக்கினார். நடிகை பி.கண்ணாம்பா நவஜீவன்(1949), ஏழைஉழவன்(1952) போன்ற படங்களை தயாரித்து காந்தீய பிரச்சாரம் செய்தார். விடுதலை பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சமும், ஆறு அவுன்ஸ் ரேஷனும், கள்ள சந்தையும் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமான சூழ்நிலையை நாட்டுமக்களிடையே ஏற்படுத்தின. கலைஞர்களிடமும் இந்த பாதிப்பை காணமுடிந்தது. திராவிட முன்னேற்ற கழகமும் திரைப்பட உலகும் - சினிமாவின் வல்லமையை மிகச்சரியாக போட்டோந்து கொண்ட தமிழக அரசியல் தலைவர்களில் முன்னணியில் விளங்கியவர் அண்ணாதுரை அவர்கள்தான்.திராவிட இயக்கத்தை சேர்ந்த சில எழுத்தாளர்களும், கவிஞர்களும் சுதந்திரத்துக்கு முன்னரே சினிமா உலகப் பிரவேசம் செய்திருந்தனர். கவிஞர் பாரதிதாசன் காளமேகம் (1940) படத்திற்கு வசனம் - பாடல்களை எழுதினார்;. 1946 சினிமா உலகுக்குள் வந்த மு.கருணாநிதி 1948 ஆம் ஆண்டில் வெளிவந்த அபிமன்யூ படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் படத்தின் டைட்டிலில்

அவரது பெயர் விளம்பரப்படுத்தபடவில்லை.1949 ஆம் ஆண்டில் அண்ணாதுரை கதை, வசனத்தோடு நல்லதம்பி, வேலைக்காரி இருபடங்கள் வெளிவந்தன. வேலைக்காரி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டு வெளிவந்த மந்திரிகுமாரி, கருணாநிதியை, யார் இவர்
என வியந்து பார்க்க வைத்தது. அதன் கதை, வசனம் கருணாநிதி. 1936 முதல் சின்ன சின்ன துணை பாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் ராஜகுமாரியில் கதாநாயகனாகி மந்திரிகுமாரியால் பெரும் புகழ் பெற்றார்.

இந்த சூழலில் திராவிடர் கழகம் பிளவுபட்டது. சி.என். அண்ணாதுரை தலைமையில் பலர் இணைந்து 1949 செப்டம்பர் 17 ஆம் நாளன்று திராவிட முன்னேற்ற கழகம் என்னும் பெயரில் தனி கட்சியை உருவாக்கினர். தமிழில் நன்றாக எழுதக்கூடியவர்கள் பலர் அண்ணாவின் கட்சியில் இணைந்தனர். அவர்களில் சிலர் சினிமா உலகில் வசனகர்தாக்களாகவும், கவிஞர்களாகவும் புகழ்பெற தொடங்கினர்.

சினிமா கவர்ச்சியால் திராவிடர் கழகத்தை விட தி.மு.கழகம் அதிகமான செல்வாக்கை பெறத் தொடங்கியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி;வி.நாராயணசாமி போன்ற பல நடிகர்கள் தி.மு.கழகத்தில் சேர்ந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது இருந்த தடையும் தி.மு.கழக வளர்ச்சிக்கு துணை செய்தன. அத்தோடு சினிமா மீடியமும் சேர்ந்து கொண்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முதலாளிகள் கூட தி.மு.கழக எழுத்தாளர்களை கதை, வசனம் எழுத நியமித்தார்கள். அண்ணா, கருணாநிதி மட்டுமல்லாமல் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கண்ணதாசன், அரங்கண்ணல் என இந்த பட்டியல் வளர்ந்து கொண்டேயிருந்தது.

பெரியாரின் திராவிடர் கழகம் போல நாத்திகத்தை விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்காமல் தமது இயக்கத்துக்கு நெளிவு, சுளிவு மிக்க பகுத்தறிவு கொள்கையை அறிவித்தார் அண்ணா. அவரது வேலைக்காரி படத்தில் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பிரகடனம் செய்தார். அதேபோல கருணாநிதியும் தனது பராசக்தி படத்தில் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாக
மாறிவிடக்கூடாது. என்பதற்காகத்தான் என்று கதாநாயகன் குணசேகரனைப் பேசவைத்தார்.
பிராமணர்களை நாங்கள் எதிர்க்கவில்லை பிராமணியத்தை தான் எதிர்க்கிறோம் என்பன அண்ணாவின் முழக்கம். கடவுள் மறுப்பு மற்றும் பிராமண எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரம் காட்டாததால் சினிமா உலகிலும் அரசியல் அரங்கிலும் தி.மு.கழகத்திற்கு பலதரப்பட்ட மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் தி.மு.கழகத்தில் உறுப்பினராகச் சேரவில்லை என்றாலும் அதன் செல்வாக்கை உயர்த்த பணம் என்னும் படத்தை தயாரித்தார். தீனா மூனா கானா என்ற பாடலைப் பாடினார். தி.மு.கழகத்தில் இணைந்திருந்த கலைஞர்கள்
அதன் தலைவர்களால் சிறப்பிக்கப்பட்டனர். புரட்சி நடிகர் இலட்சிய நடிகர் நடிப்பிசைப் புலவர் நடிகமணி என்றெல்லாம் தனது நடிகர்களுக்கு தி.மு.கழகம் பட்டப் பெயர்களிட்டு மக்களிடையே அறிமுகப்படுத்தியது. அதன் மாநாடுகளில் அவர்ளைப் பங்குகொள்ள வைத்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தது.எம்.ஜி.ஆர்.முகத்தை காட்டினால்
முப்பதாயிரம் ஒட்டுகள் கூடுதலாகக் கிடைக்கும் என்று அண்ணா மனந்திறந்து
பாராட்டினார்.

முதன் முதலில் சென்னை மாநகராட்சியை தி.மு.கழகம் கைப்பற்றிய 1959 ஆம் ஆண்டுத் தேர்தலில் அதன் கலைஞர்கள் ஓட்டு அணிதிரண்டு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர்.

1964 இல் எம்.ஜி.ஆர்.நடித்த வேட்டைக்காரன் என்னும் மசாலாப் படம் வெளிவந்தது வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த தேர்தலின் போது வேட்டைக்காரன் வருவான் ஒட்டுக்களை அள்ளிக்கொண்டு போவான் என்று காங்கிரஸ் தலைவர் காமராஜரே மக்களை எச்சரிக்க நேர்ந்தது. ஆனாலும் வேறுவழி தோன்றாமல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சார
மேடைகளில் சினிமா நடிகர்களை பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிவாஜி கணேசன், ஆர்.ரஞ்சன், நடிகை பத்மினி போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்காகபிரச்சாரம் செய்தார்கள். இதே சமயம் ஈ.வே.கி.சம்பத், கண்ணதாசன் மற்றும் பலர் தி.மு.கழகத்தில் நடிகர்களின் ஆதிக்கம் வலுத்துவிட்டது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி தி;மு.கழகத்திலிருந்து வெளியேறி தனி கட்சி அமைத்தார்கள்.

1967 ஜனவரியில் தொழில் பகைமை காரணமாக எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும்
எம்.ஆர்.ராதாவுக்கும் ஏற்பட்ட மோதலில் எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டு பாய்ந்தது. தேர்தலின்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருந்தார். கழுத்தில் குண்டுக்காய பாண்டேஜுடன் அவர் கையெடுத்துக்கும்பிடும் சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, தி.மு.கழகம் ஆட்சிபீடம் ஏறியது.

தேர்தலில் பங்குகொள்வது என்று தி.மு.கழகம் எடுத்த முடிவினாலும், அதன் தலைவர்களில் பலர் படத்தயாரிப்பாளர்களாக மாறியதாலும், 1963 இல் பிரிவினைக் போட்டோக்கையைக் கைவிட்டதாலும் அவர்களது படங்களின் அரசியல் சூடு படிப்படியாகக் குறைந்தது.

எம்.ஜி.ஆர் ஆரம்ப நாட்களில் இவர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் நேதாஜி பக்தராகவும் இருந்தார். ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கருணாநிதியோடு கனிந்த நட்பு இவரை தி.மு.கழகத்திற்கு கொண்டு சென்றது.

சுதந்திரம் பெற்ற பின்னர், கிராமங்களில் மின்சார வசதி பெருகி சினிமா பிரவேசிக்கத் தொடங்கியபோது தாங்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டுவந்த ராமன், பீமன், அர்சுனன் ஆகியோருக்கு இணையான மாவீரராகவும் ஏழை மக்களின் நண்பராகவும் எம்.ஜி.ஆரைக் திரையில் கண்டு கிராம மக்கள் மெய் சிலிர்த்தார்கள்.

தங்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்.திரைப்படத்தில் மரணமடைவதாகக் காட்டப்படுவதைக் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திரைப்படத்தை நிஜவாழ்க்கையின் ஒருபகுதியாக அல்லது தாங்கள் வாழ விரும்பும் ஒரு சமுதாய நிகழ்வாகவே மக்கள் கருதத் தொடங்கினர். எம்.ஜி.ஆரின் பாத்திரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கதாநாயகனுக்கு மரணமில்லை. அதேபோல, அந்தக் கதாநாயகன் படம் முடிவில்தான் திருமணம் செய்து கொள்வான், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அவனைக் காதலித்தாலும் ஒருத்தியைத்தான் மணம்செய்து கொள்வான், தாய் குலத்திற்கு உதவி செய்வான் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவான் தனி ஒருவனாக நின்று கொடுமைகளை எதிர்த்துப் போராடுவான். எம்.ஜி.ஆரின் சொந்தப் படமான நாடோடி மன்னன் தி.மு.கழக கொடியோடு திரைக்கு வந்தாலும் அதன் கதாநயகன் நானே போடப் போறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம், நாடு நலம்பெறும்
திட்டம், நன்மை போட்டோந்திடும் திட்டம், என்று தான் பாடுகிறான். எம்.ஜி.ஆர். கதாநாயகப் பாத்திரப்படைப்பு, கதையமைப்பு, வசனங்கள், பாடல்கள், அனைத்தும் மக்களின் ஆசைகள், குமுறல்கள், கனவுகள் இவற்றிற்கு வடிவம் கொடுப்பதாகவே இருந்தன.

எம்.ஜி.ஆருக்கென்று ரசிகர் பெருங்கூட்டம் உறுதியான உச்சக்கட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் நிறுவப்பட்டது. குக்கிராமங்களில் கூட அதற்கு கிளைகள் தோன்றின. அவை ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கென முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். 1967 பொதுத்தேர்தலில் வெற்றிபெற அண்ணாதுரை தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில், பொது வாழ்விலான ஊழல்களையும் எதிர்த்து முழக்கமிட்டார்.

அக்டோபர் 1972, முதல் தேதியன்று எம்.ஜி.ஆர் மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் அதன் மாநிலப் பொருளாளரான எம்.ஜி.ஆர். தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் பற்றி பகிரங்கமாகப் பேசினார்

தி.மு.க. உடனான கருத்துவேற்றுமை காரணமாக அதிலிருந்து விலகி அ.இ.அ.தி.மு.க. எனும் ஒரு கட்சியை ஆரம்பித்தார். 1977 ஜுன் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டியில் எம.ஜி.ஆரின் அண்ணா தி.மு.கழகம் வெற்றிபெற்றது. தமிழக முதலமைச்சராக எம.ஜி.ஆர். பொறுப்பேற்றார். சிவாஜிகணேசன், தி.மு.கழகத்தின் ஆதரவு நடிகராக, 1952 இல் பராச்கதி[ படத்தில் கதாநாயகனாகவே திரைப்பிரவேசம் செய்தார் சிவாஜிகணேசன்.

பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தனது திறமையை வெளிப்படுத்த விரும்பிய சிவாஜிகணேசன், உடல் ஊனமுற்றவராக, ஊமையாக, முதிய குடும்பத் தலைவராக, வில்லனாக, முரடனாக படத்துக்குப் படம் வித்தியாசமான காரெக்டர்களில் நடித்து தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்னும் பெருமையை பெற்றார். ஆனால், இவருக்கென்று ஒரு படிமம் (இமேஜ்) ஏற்படாதுபோயிற்று. இவரும் தனது ரசிகர்களை ஒர் அமைப்பில் கொண்டுவர விரும்பி அகில
இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தை ஏற்படுத்தினார்.

ஐம்பதுகளின் இறுதியில் காங்கிரஸ் கட்சியில் சிவாஜிகணேசன் சேர்ந்தார். தொடர்ந்து வந்த பொதுத்தேர்தல்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக உழைத்தார். 1967 தேர்தலில் இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு தமிழகத்திலும் நிகழ்ந்தது. காங்கிரஸ் தலைமை சிவாஜி என்னும் கலைஞருக்கு போட்டோய மரியாதையைக் கொடுக்கத் தவறியது என்கிற மன வருத்ததில் பல ஆண்டுக்காலம் உழன்று கொண்டிருந்த சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், எம்.ஜி.ஆரைப்போல தனக்கென்று தமிழக முன்னேற்ற முன்னணி என்னும் பெயரில் சொந்தக்கட்சியை ஆரம்பித்தார்.

ஜெயலலிதா 1965 ஆம் ஆண்டின் வெண்ணிற ஆடை படம் மூலம் தமிழ்த் திரைஉலகில் பிரபலம் பெற்ற ஜெயலலிதா, 1965 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆரின் இணையாக நடித்தார்.

எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.கழகத்தின் உறுப்பினராக 1982 இல் சேர்ந்த ஜெயலலிதாவை தனது கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார். மதுரையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் செங்கோல் போட்டோசளித்து,
இதோ என் அரசியல் வாரிசு, என்று ஜெயலலிதாவை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் எம்.ஜி.ஆர்.

1987 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர், மரணமடைந்ததும் அவரது துணைவியார்
வி.என்.ஜானகி(மருதுநாட்டு இளவரசி, நாம் படங்களில் எம்.ஜி.ஆரின் இணையாக
நடித்தவர்) தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. சட்டப் பேரவையில் தங்கள் கட்சியின் பெரும்பான்மையை நிருபிக்கத் தவறியதால் வி.என்.ஜானகியின் அமைச்சரவையும் தமிழக சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டது.

வி.என்.ஜானகி அணி-ஜெயலலிதா அணி என இருகூறுகளாக அ.இ.அ.தி.மு.க. பிளவுபட்டு அடுத்து வந்த தேர்தலைச் சந்தித்தது. இவ்விரு அணிகளில் ஜெயலலிதா அணி சட்டப்பேரவையில் 27 இடங்களைப் பெற்றது. வி.என்.ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதும் இரு அணிகளும் ஒன்றுபட்டு காங்கிரஸோடு கூட்டுச்சேர்ந்து 1991 தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது.

தமிழ்நாட்டின் தனித்தன்மை எம்.ஜி.ஆர். 1952 லிருந்து 1972 வரை தி.மு.கழகத்தில் புகழோடு பணியாற்றிவர். தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை அவரது கட்சி தோல்வியைச் சந்தித்ததில்லை.

பொதுவாழ்வில் உள்ள மற்றவர்களைக் காட்டிலும் கலைஞர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றமைக்கு மரபார்ந்த முன்னுதாரணம் ஏதுமில்லை.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசியத் தலைவர்களும் எழுத்தாளர்களும்
பத்திரிகையாளர்களுமான எஸ்.சத்தியமூர்த்தி, வ.ராமஸ்வாமி, ப.ஜீவானந்தம்
போன்றோர் நாடகக் கலைஞர்களை சமநிலையில் போற்றியதற்குச் சான்றுகள் உள்ளன. தி.மு.கழக கலைஞர்களை மதித்து, போற்றியது.

ஆயினும் ஒரு டாக்டரைவிட, இன்ஜினீயரைவிட, விஞ்ஞானியைவிட, முழுநேர அரசியல்வாதியை விட திரைப்பட நடிகர்கள் மக்களிடையே பெருத்த செல்வாக்குப் பெறக் காரணம் சினிமா மட்டுமே எனக் கூறவியலாது. தமிழ்நாட்டின் தனித்தன்மைக்கு கல்வியறிவின்மை ஒருகாரணமாக இருக்கலாம்.
தமிழ் நாட்டுப் பாமர மக்களை சினிமா மிகவும் மயக்கி வருகிறது என்னும்
விமர்சனம் இப்போதும் அரசியல்வாதியும் சினிமாக்காரருமான சோ போன்றவர்களால் சொல்லப்படுகிறது.

ஜனநாயக்கத்தில் இது சகஜம் என்போரும் உண்டு. எல்லோரும் ஒர் நிறை, எல்லோரும் ஒர் விலை என்னும்போது சினிமா நடிகரோ, நடிகையோ அரசியலுக்கு வரக்கூடாதா? என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

பொதுவாழ்வில் இந்த நிலைமை நீடிக்குமானால் உழைப்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று வருந்துபவர்களும் இருக்கிறார்கள்.

திரைப்படங்களின் வலிமையால் விரிந்து பரந்த அதன் எல்லையால் அவற்றின் நடிகர்கள் சமுகத்தின் அந்தஸ்து மிக்க பிரஜைகளானார்கள்.

வியாபாரப் பத்திரிகைகள், சினிமா நடிகர்களை வல்லமையும் வள்ளண்மையும் மிக்கவர்களாகச் சித்தரிப்பதில் போட்டியிடுகின்றன. பாக்கி;யராஜ், டி.ராஜேந்தர் போன்றவர்கள் கறுப்புப் பண கடாட்சத்தால் தங்களுக்கென்று தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி அரசியலைக் கைப்பற்றி விடலாம் என்னும் கற்பனையும் சில காலம் ஆழ்ந்திருந்தனர்.

1996 தேர்தலில் திடீரென தேவ தூதனாகத் தோன்றினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரால் தான் ஜெயலலிதாவின் ஆடம்பர, ஆணவ, ஊழல் ஆட்சியை ஒழிக்க
முடிந்தது என்று அரசியல்வாதிகளான கருணாநிதியும் கருப்பையா மூப்பானாரும் நம்புகின்றனர்.

நட்சத்திர மாயை வளர்ந்த கதை

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் கீழ்த்திசை நாடுகளில் வெடித்த விடுதலைப்
போரட்டங்களின் பயனாக அந்நாடுகளில் சுரண்டிக் கொண்டிருந்த சேட்டுகளும்
செட்டியார்களும் விரட்டப்பட்டார்கள். விரட்டப்பட்ட அவர்கள் தங்கள் சுரண்டல் பணத்தை சினிமாவில் முதலீடு செய்து படத்தயாரிப்பை பிரம்மாண்டமாக்கினார்கள்.

அதுவரை உள்ளடக்கத்தில ;(சொல்லப்படும் கதையில்) கவனம் செலுத்தி வந்த தயாரிப்பாளர்கள் புதிய பிரம்மாண்டக்ளோடு போட்டியிட நேர்ந்தது. சினிமாவின் தரம் தாழ்ந்தது.

பிரம்மாண்டத் தயாரிப்பாளர்களால் சூப்பர் ஸ்டார்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன் பெயரே ஆலிவுட் பிம்ப அமைப்பு இலக்கணம். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் உலகத் திரைப்பட விழாவின் விளைவாக பிரம்மாண்டத்தை அகற்றி மனித நேயத்தை முன் நிறுத்தி தத்ரூபமாக நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துரைக்கும் ஐரோப்பிய கலை சினிமாவின் தாக்கம்
இந்திய சினிமாவில் பிரதிபலிக்கத் துவங்கியது. பினல்ராய், ராஜ்கபூர், குருதத் போன்றவர்கள் இந்தி சினிமாவில் இந்த தாக்கத்தைக் கொண்டு வந்தனர். வங்காளத்தில் சத்தியஜித்ரேயும் போட்டோத்விக் கடக்கும் இதற்குக் காரணமாயிருந்தனர்.

வங்கத்திலிருந்து வந்து சேர்ந்த நிமாய்கோஷ் 1960 ஆண்டில் பாதை தெரியுது பார் என்னும் பெயரில் தமிழின் முதல் சோஷலிஸ்ட் யதார்த்தவாதப் படத்தை திரைக்கு அனுப்பினார். 1965-ல் உன்னைப்போல் ஒருவன் வெளிவந்தது.

திரையில் வண்ணங்கள் வந்தன. ஆனால் தாயாரிப்புகள் எண்ணங்கள் மாறவில்லை.

இதே ஆண்டுகளில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வசூலில்வெற்றி
பெற்ற படங்கள் தமிழில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு தமிழ்படங்களில் தமிழனின் முகத்தையும் கலாசாரத்தையும் ஒழித்தன.

திரைப்படக் கல்லூரியில் சினிமா விஞ்ஞானத்தைப் பயின்று வந்தவர்களும் பிரம்மாண்ட பிம்ப வளர்ச்சிக்கே துணை செய்தார்கள். விதிவிலக்கு- பாலுமகேந்திரா.

பாரதிராஜாவின் மண்வாசனை கலந்த வசன, பிம்ப மாற்றங்களுக்கு சரிசமமாக சவால்விட்டது. இந்த இடைவெளிக் கால கட்டம் பல புதுமுகங்களும் நாடிப்பாற்றல்களும், இயக்குநர்களும் தோன்ற சாத்தியமாக இருந்தது. அப்பொழுது மீண்டும் இரு பெரும் நட்சத்திரங்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட நீண்ட இடைவெளிக்கு பிறகு வேட்டியை வரிந்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது. ஏவி.எம். இவர்களின் தயாரிப்பிலிருந்த

ரஜினிகாந்த் முரட்டுகாளை மூலம் சூப்பர் ஸ்டார்-1 ஆகவும்

கமல் சகலகலாவல்லவன் மூலம் சூப்பர் ஸ்டார்-2

ஆகவும் உருவானார்கள். நட்சத்திர வியாபாரம் தலையை தூக்க, புதிய வாய்ப்புகளுக்கு மீண்டும் கதவுகள் தாளிடப்பட்டன.

விரைவில் வீடியோ பூம் துவங்க வீடியோ பைரசி தலைதூக்க ஆரம்பித்தது. இதனால் திரைப்படத் தொழில் புதிய பாதிப்புக்குள்ளானது.

இடையில் ஜெயகாந்தன்-ஏ.பீம்சிங் இணையின் சில நேரங்களில் சில மனிதர்கள்
(1977) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) வித்தியாசமாக வெளிவந்து நம்பிக்கை தந்தன. இன்று ஆலிவுட் போட்டோயலிசம் முழு பிரமையை உருவாக்கும் சக்தியை பெற்றுவிட்டது. ஒரு கம்யூட்டரின் உதவியோடு டிஜிடல், மோடில் ஒரு அம்பை தயாரித்து ஒருவனின் உடலில் படுவேகமாக செலுத்தி அது மறுபக்கம் அவன் குடலை பிய்த்துக் கொண்டு பறப்பதைப் போல் பயங்கரமாக காட்சியமைக்க முடிகிறது. அத்துடன், கம்ப்யூட்டர் கிராபிக்சும் திரையில் பிரமையை
உருவாக்குகிறது. இந்த பிரமையை உருவாக்கும் முதல் கட்டத்தில் இன்று தமிழ் சினிமா தேர்ச்சி பெற்றுவிட்டது. அதனுடைய இரண்டாவது கட்டத்திற்கான செலவு மிகவும் அதிகமாக உள்ளதால் அந்த அளவு நம்மால் செலவு செய்ய முடியாமல் இருப்பதால் மட்டுமே அந்தக் கட்டம் இங்கு இன்னும் சாத்தியமாகாமல் இருக்கிறது.

1996-ம் ஆண்டில் 76 தமிழ்ப்படங்கள் வெளிவந்ததாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், மனிதனை மேன்மையுறச் செய்யும் ஜனநாயகக் கலாச்சாரத்தைப் பிரதிபலித்து எத்தனை படங்கள் தயாரிக்கப்பட்டன? இந்தக் கேள்விக்கான பதில் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. சென்ற ஆண்டு வெளிவந்த 76 படங்களில் 14 படங்கள் வசூலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர்களின் கல்லாப்பெட்டியை நிரப்பியதாகப் பெருமித்தோடு கணக்குச் சொல்கிறார்கள்.

காதல் கோட்டை, காதல் தேசம் படங்களின் இளைஞர்களும் மாணவர்களுக்கும்
காதலிப்பது ஒன்றே வேலை, வேட்கை, கவலை அவ்வாறே ஆசையும், பூவே
உனக்காகவும், வான்மதியும்.

முத்து- ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு மாவீரன்

இந்தியன், குருதிபுனல்- தனிநபர் பயங்கரவாதம்

மீதமுள்ள வசூலில் தோல்வி கண்ட 68 படங்களிலும் ஏறத்தாழ இதே கதைதான். மனித முயற்சியால் தோன்றிய விஞ்ஞான விந்தையான சினிமா முதல்
தொலைக்காட்சி வரை மனிதனின் மெய்யான வாழ்வுக்கான போராட்டங்களை மறக்கடிக்கச் செய்யும் போதை வியாபாரத்தைத்தான் நடத்துகின்றன.


|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter