புத்தகத்தின் பெயர் : மக்களை மகிழ்வித்த மாமேதை எஸ்.எஸ்.வாசன் |
விலை : ரூ.20 |
எழுத்தாளர் : திரு.பி.சி.கணேசன் |
பதிப்பகம் : கலைஞன் பதிப்பகம்
|
திரையுலக மாமேதை எஸ்.எஸ்.வாசனை அறியாதவர்கல் திரையுலகை அறியாதவர்கள் எனலாம். திரைப்படைத்துறையில் அத்துனைப் பிரபலமானவர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள். இந்த் இனிய நூலை எழுதியவர் திரு.பி.சி.கணேசன் அவர்கள். இவர் எண்ணற்ற சுய முன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர் ஆவார்.
”உழைப்பு, நுண்ணறிவு, எளிமை, விடா முயற்சி, சாதூர்யமாகத் திட்டமிடுதல் போன்ற அரிய குணங்கள் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு எஸ்.எஸ்.வாசனின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டாகும்” - என்று திரு.பி.சி.கணேசன் அவர்கள் இந்நூலில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
திரு.ஏவி.எம். அவர்களே பெரிதும் மதித்த பெரியவர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள். இந்தச் சிறந்த நூலை கலைஞன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.. வாங்கிப் படியுங்கள். இந்நூலின் விலை ரூ.20 மட்டுமே.
|