|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
சொல்லப்படாத சினிமா
புத்தகத்தின் பெயர் :சொல்லப்படாத சினிமா
விலை : ரூ.200
எழுத்தாளர் :ப.திருநாவுக்கரசு

பதிப்பகம் : நிழல்
31/48, இராணி அண்ணாநகர்,
கே.கே.நகர்,
சென்னை - 78.
தொலைப்பேசி : 24728326

தமிழ் திரைப்பட வரலாற்றை பலரும் எழுதி இருக்கின்றனர். தமிழ் குறும்படம் sollapadatha Cinemaமற்றும் ஆவணப்படம் பற்றிய வரலாறு இப்போது தான், முதன் முறையாக நூல் வடிவில் எழுதப் பட்டுள்ளது. இந்திய மொழிகளில் தமிழில் முதன் முதலாக வெளிவந்துள்ளது. தமிழ் குறும்படம் மற்றும் ஆவணப்பட வரலாற்றிற்கு முன்னால், உலகக்குறும் படங்களைப் பற்றியும், இந்திய குறும்படங்களைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுக வரலாறு தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தொடக்க காலப் படங்கள் பலவும் அழிந்து விட்டன. ஆகவே இருப்பவைகளைக் கொண்டே இந்நூல் தொகுக்கப் பட்டுள்ளது. தமிழில் வெளிவந்து, இன்று வெளிநாட்டு திரைப்பட ஆவணக் களரிகளில் இருக்கும் படங்களை தேட வேண்டும்; பாதுகாக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு ஏற்பட இந்நூல் உதவினால், அதுவே இந்நூலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதுவதாக ஆசிரியர் கூறியுள்ளார். இன்று மக்கள் தொடர்பூடகக்கல்வி பெருமளவு தமிழ் மாணவர்களால் பயிலப்படுகிறது. அவர்களுக்கான பாட நூல்கள் தமிழில் இல்லை. இந்நூல் அக்கல்வி நூலுக்கான வரலாற்றுப் பகுதியை நிறைவு செய்தால் அதை பெரும் பேறாக கருதுவதாக ஆசிரியர் கூறியுள்ளார்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter