|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் மீது வழக்கு - சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி ஆஸ்பத்திரியில் அனுமதி - மத்திய மந்திரி நாராயணசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் அனுப்பினார் - கொழும்பு உயர் நீதிமன்றம் முன் ரணில் விக்கிரமசிங்க உண்ணாவிரதம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
சிவாஜிராவ் டூ சிவாஜி
புத்தகத்தின் பெயர் : சிவாஜிராவ் to சிவாஜி
விலை : ரூ.84
எழுத்தாளர் : திருவாரூர் குணா

பதிப்பகம் : விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600002.

துருவ நட்சத்திரங்களே எரி நட்சத்திரங்களாக விழுந்துவிடுகிற காலத்தில், தமிழ் சிவாஜிராவ் டூ சிவாஜிசினிமாவின் விடிவெள்ளியாக இன்னும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. திரையுலகை பொருத்தவரை அவரது சாதனை, யாராலும் மறுக்க முடியாத ஒன்று. ஆனால், அரசியல் என்ற பெரும் கனவோடு திரிகிற அவரது ரசிகர்களுக்கு ரஜினி இன்னமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கிற தேன் அடைதான்.

இவர் தேனடையா? சல்லடையா? என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், ஒரு தேனீயை போல சுற்றி திரிந்து ரஜினி பற்றிய அருந்தகவல்களை சேகரித்து சுவைபட கொடுத்திருக்கிறார் திருவாரூர் குணா. ஜுனியர் விகடன் இதழில் தொடராக இவர் எழுதிய 'சிவாஜிராவ் டூ சிவாஜி' என்ற கட்டுரைகள் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. விகடன் பிரசுரமே இந்த நல்ல காரியத்தையும் செய்திருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பர்களின் பேட்டிகளும், அவருடைய படங்களை இயக்கிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், ரஜினி பற்றி சொல்கிற விஷயங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. ரஜினி நடிக்க வருவதற்கு முன்பு சென்னையில் தங்கியிருந்த வீட்டின் புகைப்படம் காணக்கிடைக்காத அற்புதம். அவர் நண்பர் விட்டல் சொல்லும் செய்திகளும் கேட்க கேட்க சுவாரஸ்யம்.

சினிமா ஆர்வம் இல்லாத சாதாரண பொதுமக்கள் கூட, இந்த கட்டுரைகளில் இருந்து உழைப்பின் அருமையை புரிந்து கொள்ள முடியும். ரஜினி ரசிகர்களை பொருத்தவரை இது பொக்கிஷமே!

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter