புத்தகத்தின் பெயர் : நினைவுகளின் ஊர்வலம் |
விலை : ரூ.13.50 |
எழுத்தாளர் : புலவர். புலமைப்பித்தன் |
பதிப்பகம் : திருமகள் நிலையம்
|
தமிழக முன்னாள் முதல்வராக இருந்து செம்மையாக ஆட்சி செய்தவர் திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள். உலகில் நடிகர்களில் முதன்முதலாக முதலமைச்சரானவர் என்ற பெருமையும் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உண்டு. அத்தகைய எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய ஒரு சிலருள் புலவர் புலமைப்பித்தன் குறிப்பிடத்தக்கவர் ஆவார். புலவர். புலமைப்பித்தன் தமிழ்நாடு அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வாழ்வில் எத்துணை உதவிகள் ஆற்றியுள்ளார் என்பதை அவருடைய திரைப்படங்களுக்கு இனிய பாடல்கள் பலவற்றை எழுதிய புலவர் புலமைபித்தன் அவர்கள் எழுதிய நூல்தான் ‘நினைவுகளின் ஊர்வலம்’ என்பது.
தமிழ்ப் புலவர்களுக்கே உரிய நன்றியுணர்வு என்னும் நல்லுணர்வு இந்நூலின் மூலம் நன்கு புலப்படுகிறது. இந்நூல் விறுவிறுப்பாகச் செல்கிறது. இந்த நூலை ‘திருமகள் நிலையம்’ வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ.13.50 மட்டுமே. இந்நூல் அனைவருமே படிப்பதற்கு ஏற்றது.
|