|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
டிஜிட்டல் ஓளிப்படத்துறையில் வெற்றி பெறுவது எப்படி?
புத்தகத்தின் பெயர் :டிஜிட்டல் ஓளிப்படத்துறையில் வெற்றி பெறுவது எப்படி?
விலை : ரூ.799
எழுத்தாளர் :KL.ராஜா பொன்சிங்

பதிப்பகம் : Universal Print systems LTD,
3/415,singaaravelu street, neelankarai,
Chennai - 600 041.
www.upslindia.com




ஒரு தொழில் சிறக்க வேண்டுமானால் அது பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் டிஜிட்டல் ஒளிப்படத்துறையில் வெற்றி பெறுவது எப்படி?பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். முன்பெல்லாம் எப்படி கருப்பு போர்வைக்குள் தலையை நுழைத்துக் கொண்டு படங்களை எடுப்பார்களோ அப்படியே பல தொழில்நுட்பங்கள் கருப்புப் போர்வை கொண்டு மறைக்கப்பட்டே கிடந்தன. அவற்றில் ஒளிப்படக்கலையும் கூட ஒன்று என தயக்கமில்லாமல் சொல்லலாம்.

ஒளிப்படக்கலை ஒரு பொழுதுபோக்கு கலையாக மட்டுமின்றி வருமானம் தரும் ஒரு தொழிலாகவும் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு பல சிக்கலான பணிகள் எளிமையாகி உள்ளன. புதிய கருவிகளின் அறிமுகம் ஒளி ஓவியர்களின் கற்பனைக்கு வடிவம் கொடுப்பதற்கெனவே வந்தவை போலிருக்கின்றன.

புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அவற்றை சொல்லித்தரும் நிறுவனங்களும், நூல்களும் மிகவும் தேவை என்பது எல்லோர் மனதிலும் பிளாஷ் அடிக்கும் உண்மையாகும்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter