புத்தகத்தின் பெயர் : குடியினால் குடி சாய்ந்த கலைக் கோபுரங்கள் |
விலை : ரூ.28 |
எழுத்தாளர் : அறந்தை நாராயணன் |
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
|
திரைத்துறை என்பது பணமும் புகழும் ஒருங்கே கிடைக்கும் வளமான துறையாகும். பெரும்பாலான பணத்தைப் பார்க்கும் போது நம் மனது மயங்கும். எனவே, அந்தப் பணத்தைச் செலவு செய்ய பல பழக்கங்களைத் திரையுலகினர் வளர்த்துக் கொள்கின்றனர், அதில் ஒரு மோசமான பழக்கம்தான் மது அருந்துதல்.
மது என்னும் மாய அரக்கனின் வாயில் அகப்பட்டு எண்ணற்ற திரையுலக விண்மீன்கள் உதிர்ந்துவிட்டன. அத்தகையவர்களின் வாழ்வைத்தான் ‘குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்’ என்னும் இந்நூல் விளக்குகிறது. இதனை எழுதியவர் பல திரைத்துறை சார்ந்த நூல்களை எழுதிய திரு.அறந்தை நாராயணன் அவர்கள். இந்த நூலை ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ என்னும் புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.28. மட்டுமே. திரையுலகினர் மட்டுமின்றி அனைவருமே இந்நூலைப் படிக்கலாம்.
|