|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
சினிமா சிந்தனைகள்
புத்தகத்தின் பெயர் : சினிமா சிந்தனைகள்
விலை : ரூ.15
எழுத்தாளர் : திரு.ஏ.கே.செட்டியார்

பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம்

’உலகம் சுற்றிய தமிழர்’ என அழைக்கப்பட்டவர் திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள். மகாத்மா காந்தியடிகளின் பக்தர். நாற்பதாண்டு காலம் ‘குமரி மலர்’ என்ற பத்திரிகையை நடத்தியவர். இவர் 1937 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பற்றி டாக்குமெண்டரி படத்தைத் தயாரிக்கத் தொடங்கி மூன்றாண்டுகளில் படப்பிடிப்பை முடித்து, 1940 ஆம் ஆண்டு சென்சார் வாங்கி, நாட்டின் பல பகுதிகளிலும் வெளியிட்டவர். இத்தகைய எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவர் எழுதிய நூல்தான் ‘சினிமா சிந்தனைகள்’ என்பது.

இவர் இந்நூல், “ சினிமா, அதிர்ஷ்டவசமாக மனித சமூகத்துக்குக் கிடைத்த ஒரு நல்ல சாதனம்”- என சினிமாவைப் புகழ்கிறார். இந்நூலை சந்தியா பதிப்பகம் அழகாக வெளியிட்டுள்ளது. இந்நூல் அளவில் சிறியது, ஆனால் பயன்பாட்டில் பெரியது, இந்நூலின் விலை ரூ.15 மட்டுமே. படித்துச் சுவையுங்கள்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter