|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
சினிமா நிஜமா?
புத்தகத்தின் பெயர் : சினிமா நிஜமா?
விலை : ரூ.75
பக்கம் : 216
எழுத்தாளர் : பீ.லெனின்

பதிப்பகம் : ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
NO:24, கிருஷ்ணா தெரு,
பாண்டிபஜார், தி.நகர்,
சென்னை - 600 017

சினிமா பற்றிய அதன் தொழில் நுட்பம் மற்றும் தன்மைகள் குறித்த எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எடிட்டர் லெனின் எழுதிய புத்தகமாகும். ஆனால் 'சினிமா நிஜமா' என்ற இந்த நூல் அவற்றினின்றும் முற்றிலும் மாறுபட்டது. எந்தவொரு விஞ்ஞானப் படைப்பாக இருப்பினும் அது மனிதநேயம். உலக நன்மையை அக் கருத்திற்கொண்டே படைக்கப் படுபவையாக இருக்க வேண்டும். இதுவே வாழ்வியல் நியதி, ஆனால் இன்றையச் சூழலில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எந்த அளவு நன்மை பயப்பனவாக உள்ளதோ அதைப்போலவே அதன் மறுப்பக்கம் தீய விளைவுகளை ஏற்படுத்துவனவாகவும் உள்ளது என்பதே நடைமுறை உண்மை. அதற்கு சினிமாவும் விலக்கல்ல. இதையேதான் நூலாசிரியர் சினிமா என்ற ஊடகம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும், அதை எப்படிப் பயன்படுத்தினால் மனிதகுல மேம்பாட்டிற்கும் மனிதனின் மனமும் அறிவும் விசாலமடைவதற்கும் அதுவே ஒரு கருவியாக அமையும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சினிமா என்ற நிழல் உலகத்தில் நிஜமான மனிதர்களின் வாழ்வும் - மனித குலத்தின் கலாச்சாரமும் பிரிக்க முடியாதவாறு எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை மிக அருமையாக இப்புத்தகம் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

 

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter