|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
தொலைக்காட்சி உலகம்
புத்தகத்தின் பெயர் : தொலைக்காட்சி உலகம்
விலை : ரூ.300
எழுத்தாளர் :பவா சமத்துவன்

பதிப்பகம் : புதுயுகம் செய்முறை செம்மையாக்கம்,
சென்னை - 5.
தொ.பே. : 28515051 / 9444015755

இன்று தமிழர்களின் உலகமே தொலைக்காட்சியாகிவிட்டது. பொருத்தமாகத் Tholaikaatzhi Ulagam'தொலைக்காட்சி உலகம்' என்று தலைப்பிட்டிகிறார் பவா சமத்துவன். தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது என்ற நிலையை மாற்றி கல்வி, அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் பன்னாட்டு நிகழ்ச்சிகளையும் வரவேற்பறையில் மட்டுமல்ல... சமையல் அறையிலும் தந்துவிட்டுப் போகிறது இந்த நீள் சதுரப் பெட்டி! இதன் எலக்ட்ரானிக் வடிவமைப்பைத்தான் இந்த நூல் சொல்லவில்லை. மற்ற எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்திருக்கிறார் நண்பர்.

செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்ல வசதியாக இருப்பதைப் போர்ட்டபுள் டி.வி. என்பார்கள். சுமார் 500 பக்கங்களில் ஒரு போர்ட்டபுள் சேனலையே கொடுத்திருக்கிறார் பவா சமத்துவன்.

ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதில் தொடங்கி அது ஒளிபரப்பாகிற வரக்கும் நடக்கிற நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறது. இந்தக் கையேடு. தொலைக்காட்சியில் இவர் பணியாற்றியபோது நடந்த சம்பவங்களைச் சுவையாக ஆங்காங்கே சேர்த்து, படிக்கின்ற வாசகனையும் ஒரு தொலைக்காட்சி ஊழியனாகவே ஆக்கிவிட்டது இவரது எழுத்து!

மூத்த அரசியல்வாதி ஆர்.நல்லகண்ணு அவர்களைப் பேட்டி எடுக்க வருவதாகச் சொல்லிவிட்டு இரண்டு நாள்கள் போகாமலே இருந்திருக்கிறார் பவா. அவரோ, "நீங்கள் நேரங்கிடைக்காமல் தவிக்கிறீர்கள். நானே வந்துவிட்டேன்" என்று இவர் இருப்பிடம் தேடி வந்து பேட்டியளித்திருக்கிறார்.தொலைக்காட்சியின் வலிமையையும் ஒரு நிருபர் சொன்னபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில் சுட்டிக் காட்டிய பவாவின் எழுத்தாளுமைக்கு இதுவே உதாரணம்.

கைநிறைய கேள்விகளை எழுதிக்கொண்டு போகிற நிறுபர்கள், அதை அடுத்தடுத்துப் படித்துவிட்டு மிச்சத்தை பேட்டி தருகிற பிரபலங்களே பார்த்துக் கொள்வார்கள் என்பது மாதிரி நடந்து கொள்வார்கள். நான் சந்தித்த பெரும்பாலான தொலைக்காட்சி நிருபர்களின் பாணியும் இதுதான். ஆனால் இவரோ, நிருபர், தயாரிப்பாளர் பாணியையும் கடந்து ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரைப் போல எழுதியிருக்கிறார் இந்த நூலில் எந்த திசையில் ஒளி இருந்தால் எந்தத் திசையில் கேமிரா வைக்க வேண்டும் என்று மட்டுமல்ல... பின்னொளி நிழல் ஒளி, செயற்கை ஒளி, மைய ஒளி, நிரப்பு ஒளி என்று ஒளியின் அத்தனை வகையையும் அலசி ஒளிப்பதிவாளர்களையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

சின்னத்திரையில் சாதனை படைக்க வேண்டும் என்ற தாக்கத்தோடும் ஏக்கத்தோடும் தவிக்கும் இன்றைய இளைய சமுதாயம் இந்த நூலைப் படித்தால் போதும்; மிகப் பெரிய சாதனையாளராக வர முடியும்! ஏன் இத்தனை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றியும் அதன் நுட்பங்களைப் பற்றியும் சொல்கிற பவா, அங்கு பணியாற்றுபவர்கள் இடையே எழும் போட்டி, பொறாமைகள் பற்றியும் சொல்கிறார். அதையெல்லாம் தெரிந்து கொண்டு களம் இறங்குகிற யாவருக்கும் 'தொலைக் காட்சி உலகம்' உள்ளங்கைகளில்!

[ - மா.ஆண்டோ பீட்டர் ]

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter