|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
|
|
|
|
புத்தக விமர்சனம்
திரை இசை அலைகள்
புத்தகத்தின் பெயர் : திரை இசை அலைகள்
விலை : ரூ.175
எழுத்தாளர் : திரு.வாமனன்

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்

திரையுலகின் ஆரம்பக் காலங்களில் இப்பொழுதுள்ளது போல் உடனே நடிகனாகி விட முடியாது. பல்வேறு சோதனைகளைக் கடந்து பின்பே நடிகனாக முடியும் என்பது அக்கால சினிமா சூழ்நிலை.

அந்தக் காலத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நல்ல முக அழகும், சொந்தக் குரலில் பாடும் திறமையும், வாள் வீச்சு, குதிரையில் சவாரி செய்யும் பயிற்சியும், மல்யுத்தப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இவையெல்லாமோ அல்லது இவற்றில் ஒன்றிரண்டு திறமைகளை நிறைவாகப் பெற்றிருந்தவர்கள் தான் மக்களிடையே பிரபலமான நடிகர்களானார்கள். அவர்களில் பாடக பாடகிகளும் அடங்குவர்.

அத்தகைய 42 பேர்களின் வாழ்வைப் பற்றிய இனிய நூல்தான் ‘திரை இசை அலைகள்’ என்பது. இந்நூலை எழுதியவர் திரு.வாமனன் அவர்கள். இவர் வேறு சில திரைத் தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது. இதனை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.175.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter