புத்தகத்தின் பெயர் : தமிழ் சினிமா எழுச்சியும் வீழ்ச்சியும்! |
விலை : ரூ.60 |
எழுத்தாளர் : ஜெ.பிஸ்மி |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in |
'தமிழ் சினிமா எழுச்சியும் வீழ்ச்சியும்' - சினிமா குறித்து ஜெ.பிஸ்மி எழுதிய இரண்டாவது புத்தகம், பொழுதுபோக்கு என்ற பெயரில் வெளிவரும் குப்பைப் படங்களைக் கடுமையாய்ச் சாடும் ஜெ.பிஸ்மி, தமிழில் ஆரோக்கியமான படங்களின் வருகை அதிகரிக்க வேண்டும் என்பதைத் தன் எழுத்தின் நோக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நூல் விமர்சன நோக்கில் தமிழ் சினிமாவின் போக்கை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. சினிமா ரசிகர்களுக்கும், திரைப்படத்துறையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கும் தமிழ் சினிமா குறித்து அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளின் நேர்த்தியான தொகுப்பு இந்நூல்!
|