|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
நேற்றைய காற்று
புத்தகத்தின் பெயர் : நேற்றைய காற்று்
விலை : ரூ.55
எழுத்தாளர் : கவிஞர். திரு.யுகபாரதி

பதிப்பகம் : விகடன் பிரசுரம்

ஒரு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கும் அத்திரைப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் மிக முக்கியக் காரணமாக அமைகின்றன. எனவே, திரைப்பாடனாசிரியர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த வகையில் 20 திரையிசைக் கவிஞர்களின் திறனை அழகாக அறிமுகப்படுத்துகிறது. ‘ நேற்றைய காற்று’ என்னும் நூல். இந்த இனிய நூலை தனக்கே உரிய எளிய நடையில் எழுதியுள்ளார் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். திரு.யுகபாரதி அவர்கள்.

இந்த நூலின் முகப்பட்டையில் இனிய பாடல் வரிகளில் திரையுலகில் அமரகாவியம் படைத்த கவிஞர்களின் வாழ்க்கைச் சுவடுகள் என்றே எழுதியுள்ளனர்.

இந்த இனிய நூலை ‘ விகடன் பிரசுரம்’ வெளியிட்டுள்ளது. விலை.ரூ.55. திரையுலகில் பாடல் எழுத முயற்சி செய்யும் புதுக்கவிஞர்கள் இந்த நூலை வாங்கிக் கற்றால் மிகுந்த பயன் பெறுவர்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter