|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
களவுத் தொழிற்சாலை
புத்தகத்தின் பெயர் : களவுத் தொழிற்சாலை
விலை : ரூ.60
எழுத்தாளர் : ஜெ.பிஸ்மி

பதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014
தொலைப்பேசி - 28485943

'கனவுத் தொழிறசாலை' என்று சொல்லப்படும் திரைப்படத்துறை எல்லாரையும் ஈர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம்.

ஏராளமான ரசிகர்கள், எளிதில் வந்தடையும் புகழ், பணம் போன்றவற்றால் திரைப்படத்துறை பலரையும் தன்வசம் காந்தமென ஈர்க்கிறது.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பளபளப்பாகத் தெரியும் இந்த ஒளி Kalavu Thozhirsalaiஉலகத்துக்குள் எத்தனை எத்தனை இருள் முகங்கள் இருக்கின்றன? அவற்றின் சுயநலங்களால் அந்தத் துறை எப்படியெல்லாம் பலவீனப்பட்டு, இற்று நொறுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சினிமாவின் மீது கொண்ட அக்கறையோடு இந்நூல் அலசி இருக்கிறது.

மனசாட்சியோடு சிந்திக்கிற ஒவ்வொருவரும் இந்த அவலங்களை அலட்சியப்படுத்த முடியாது!

இது யார்மீதும் தனிப்பட்ட முறையில் சேறுவாரி இறைக்கும் நோக்கம் கொண்டதல்ல! பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அட்சயப் பாத்திரமாக இருக்கும் திரைப்படத்துறை செழிக்க வேண்டும்; செம்மைப்பட வேண்டும் என்ற நல்லுணர்வோடு சுட்டிக்காட்டப்பட்டுள்ள அவலங்கள்! இது 'களவுத் தொழிற்சாலை' என்ற தலைப்பில் 'சினிகூத்து' வார இதழில் ஓராண்டு காலம் வெளிவந்தபோது இதற்குக் கிடைத்த வரவேற்பும். திரைப்படத்துறையிலுள்ள சிலரால் எதிர்ப்புகளை எதிர்கொண்ட நிகழ்வுகளும், இந்நூலின் உயிர்ப்புத் தன்மைக்குச் சான்றுகள்!

இந்நூலாசிரியர் ஜெ.பிஸ்மி 25 ஆண்டுகாலத் திரைப்பட பத்திரிகையாளராகவும், திரைப்பட ஆய்வாளராகவும், ஒரு தயாரிப்பாளராகவும் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சினிமா வாழவேண்டும் என்ற ஆதங்கத்தோடு, பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று தெரிந்தும், ஒரு பொதுநோக்குக்காகப் பயமின்றி, நடுநிலையோடு இந்நூலை எழுதியிருக்கிறார்.

திரைப்படத்துறையை நேசிக்கிற அத்தனைப் பேரும் படிக்க வேண்டிய நூல்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter