புத்தகத்தின் பெயர் : காதல் கோட்டை |
விலை : ரூ. 60 |
எழுத்தாளர் : அகத்தியன் |
பதிப்பகம் : போதி பதிப்பகம்
43-A, வெள்ளாளர் தெரு,(இரண்டாவது மாடி),
கோடம்பாக்கம், சென்னை - 600 0024. |
இயக்குநர் அகத்தியன் தமிழ்த் திரைப் படத்துக்கு தேசிய அங்கிகாரம் பெற்றுத் தந்த சில இயக்குநர்களில் ஒருவர். இன்னொரு சிறப்பும் அகத்தியனுக்கு உண்டு. தமிழ் சினிமாவுக்கு திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த இயக்குநர் இவரே.
கதை, வசனகர்த்தாவாக திரைப்படங்களில் ஈடுபடத் தொடங்கிய அகத்தியன் இயக்கிய படங்கள் 'மதுமதி', 'வான்மதி', 'காதல் கோட்டை', 'கோகுலத்தில் சீதை'.
'காதல் கோட்டை' மூலம் நக்பிக்கையூட்டும் திறமையாளராக அடையாளம் காட்டிய அகத்தியன் படத்துக்குப் படம் உயர்ந்திருக்கிறார். ஜனாதிபதி விருது மூலம் தமிழ் சினிமாவையும் உயர்த்தியிருக்கிறார்.
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு இயக்குநர் மூளைக்குள் மின்னல் அடித்தது. ஒருவரையொருவர் பார்காமலேயே காதலித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது, கடைசிக்காட்சியில் காதலனும், காதலியும் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்ற கேள்வியே தான் இத்திரைப்படமாகும். இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையில் தான் புதைந்து கிடந்தது காதல் கோட்டை திரைக்கதையாகும். இத்திரைக்கதையை நூல் வடிவில் பார்க்கும் அரிய வாய்ப்பை போதி பதிப்பகம் உருவாக்கியுள்ளது.
|