|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
|
|
|
|
புத்தக விமர்சனம்
தமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும்
புத்தகத்தின் பெயர் : தமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும்
விலை : ரூ.300
எழுத்தாளர் : ஆ.சந்திரபோஸ்

பதிப்பகம் : சகுந்தலை வெளியீடு
D2/1, கைலாசபுரம் டவுன்ஷிப்,
திருச்சிராப்பள்ளி - 620014
தொலைபேசி : 0431 - 2551280
செல் : 9443216981

தற்போது ஆ.சந்திரபோஸ் எழுதிய 'தமிழ் சினிமா': சில பார்வைகளும் சில பதிவுகளும்' என்ற நூலை சகுந்தலை வெளியீடு வெளியிட்டுள்ளது. ஆ.சந்திரபோஸ் ஒரு சிறந்த எழுத்தாளர், கதை இலக்கியங்களைப் போலவே இந்த நூலையும் உருவாக்கியிருக்கிறார். ஆசிரியரின் ஆழ்ந்த சமூக ஞானம் இதில் பளிச்சிடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் எதிர்காலத் தலைமுறை தேர்ந்த திரைப்படங்களை எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டும் என்பதைச் சரியாகவே விளக்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் முழுவதும் ஒரு சமூக விவாதமாகவே அமைந்திருக்கிறது.

அவர்கள், அபூர்வராகங்கள் முதல் மொழி, ஆட்டோகிராப் வரை மனதிற்கு சிறந்த காட்சிப்பதிவுகளை இந்நூலில் அளித்துள்ளார்கள். இந்த நூலைப் தொடர்ந்து ஒரு குறும்படம் எடுக்கும் திட்டமும் இந்நிறுவனத்திற்கு இருக்கிறது. அதற்கான அனைத்துத் தயாரிப்புப் பணிகள் கூட முடிந்து விட்டன. முன்னதாகவே படம் எடுத்து முடித்திருக்க வேண்டும். எதிர்பாராத காரணங்களால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறும்படத்தையும் 'சகுந்தலை' எடுத்து முடிக்கும். இந்த அமைப்பை ஒரு இயக்கமாக வளர்த்து அரிய படைப்புகளை இதன் மூலம் சமூகத்திற்குத் தெரியப்படுத்தி எங்களின் வித்தியாசமான கலைப்பணியைத் தொடரவிருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. திரைத்துறையில் நுழைய துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter