புத்தகத்தின் பெயர் : ஜானி |
விலை : ரூ.60 |
எழுத்தாளர் : இயக்குநர் மகேந்திரன் |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943 |
திரைப்படம் என்பது விஷுவல் மீடியா, பேசாமலே - பாடாமலே கதாபாத்திரங்களின் உணர்ச்சி பாவங்கள் மூலமாகவே படம் பார்ப்பவர்கள் மனதில் சொல்ல வந்த கருத்தைப் பதிவு செய்கிற கலை வடிவமே திரைப்படங்கள்? என்று முதன்முதலாக தமிழில் செய்து காட்டியவர் இயக்குநர் மகேந்திரந்தான்! இதைத் திரைத்துறையைச் சார்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள்!
'தங்கப் பதக்கம்' படத்தில் நடிகர் திலகத்துக்குப் பக்கம் பக்கமாக வசனங்கள் எழுதிப் அதே மகேந்திரன் தான் 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'நண்டு', 'ஜானி' போன்ற படங்களில் வசனங்களைக் குறத்து காட்சிகள் மூலமாகவே கதை சொன்னார். இந்த பாணி தமிழ்த் திரைப்படத்தினை புதிய பாதைகளில் பயணிக்கச் செய்தது'.
'ஜானி' ரஜினிக்கு புதிய வடிவம் தந்த படங்களில் முக்கியமானதொரு படம்! 1980-ல் திரைக்கு வந்து மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்ற 'ஜானி' படத்தின் திரைக்கதை - வசனம் 25 ஆண்டுகளுக்குப் பின்னால் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
திரைப்பட உலகில் சாதிக்க நினைப்பவர்கள். திரைப்பட ஆர்வலர்கள் அத்தனை பேருக்கும் இது பயன்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
|