|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் மீது வழக்கு - சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி ஆஸ்பத்திரியில் அனுமதி - மத்திய மந்திரி நாராயணசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் அனுப்பினார் - கொழும்பு உயர் நீதிமன்றம் முன் ரணில் விக்கிரமசிங்க உண்ணாவிரதம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
இசையின் தத்துவமும் அழகியலும்
புத்தகத்தின் பெயர் : இசையின் தத்துவமும் அழகியலும்
விலை : ரூ.40
எழுத்தாளர் : பிரேம் ரமேஷ்

பதிப்பகம் : செம்புலம்
50, 5வது தெரு, அச்சுதன் நகர்,
ஈக்காட்டுத் தாங்கல், சென்னை - 600 097.
தொலைபேசி - 234 6473

பாடல்களுக்கு இசை அமைப்பது என்பதைப் போலவே காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைப்பது என்கிற வித்தை பெரிதும் கைவரப்பெற்றவர். இதில் இருவருக்கு நிகர் இவரே.

சலனப்படம் என்பது காட்சி ரூபம் ஒலிரூபம் இரண்டும் சேர்ந்தது.

படம் பார்ப்பது. சலனம் கேட்பது. ஓர் ஒலி ரூபத்தைக் கொண்டு மனதிலோ Ilayarajaதிரையிலோ ஒரு காட்சியைக் கொண்டுவர முடியுமா. முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பூபாளம் இசைத்தால் அதிகாலை நேரம் மனக்கண்ணில் தோற்றமளிக்கிறது.

ஒலி ஒரு காட்சியைக் கொண்டுவருவது போல மணம்(வாசம்) கூட மனக்கண்ணில் காட்சியைக் கொண்டு வரும். நாக்கில்படும் ருசியும் மனசினுள் ஒரு காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தும்.

புலன்கள் விந்தையானவை!

இப்போது நவீன நாடகங்களில் ஒளி உத்தி அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திரை பிம்பங்களுக்கோ ஒலி உத்தி மிக அற்புதமாக கையாளப்படுகிறது. இந்தக் கலையை மிகச் சரியாக உயர்த்திக்காட்டியவர் பண்ணைபுரத்து ராஜா அவர்கள்தான். இதில் அவர் செய்து காண்பித்த ஜாலவித்தைகள் அர்ச்சுனன் கை பாணங்களுக்கு நிகரானவை.

"கதை சொல்லி" இதழுக்காக இசைஞாணி அவர்களை ஓர் நேர்காணல் என்று பார்க்கச் சென்று வந்த எழுத்துலக பிரம்மாக்களான பிரேமும் ரமேஷும், ஒரு பச்சிலைச் செடியைக் கொண்டுவரப் போன அனுமான் சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டுவந்ததுபோல ஏகப்பட்ட இசைச் செயதிகளோடு புதுவை திரும்பினார்கள். இந்த சிறிய புத்தகத்தைப் போல இன்னும் சில புத்தகங்கள் எழுத உள்ளார்கள் என்பது இப்போதைக்கு ஒரு செய்தி.

இளையராஜா அவர்களின் இசைப்பபடைப்புகள் பற்றி இப்புத்தகத்தில் ஓர் அளவே சொல்லப்பட்டிருக்கிறது.

கி.ராஜநாராயணன்

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter