புத்தகத்தின் பெயர் : கிசுகிசு |
விலை : ரூ.75 |
எழுத்தாளர் : ஈ.பா.பரமேஷ் |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in |
இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். அதுமாதிரி நடக்கிற எல்லா செய்திகளும் வரலாறாக மாறுகிறதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பத்திரிகைகளில் வெளியாகும் திரையுலகக் கிசுகிசுக்கள் எல்லாமே உண்மையாகிவிடுகிறது. நமது திரைப்பட பார்ட்டிகள் அந்தரங்கத்தில் ஆடும் ஆட்டங்கள் பற்றி நாம் 'சினிகூத்து' வார இதழில் பதிவு செய்த கிசுகிசுக்கள் பின்னர் உண்மையாகி இருப்பதை திரும்பிப் பார்த்தோம்!
சரியான் செய்திகளைத்தான் முன்னறிந்து வெளியிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.
உலக நாயகன் நடிகருக்கும்- சிம்ரமான நடிகைக்கும் என்னென்ன உறவுகள் இருந்தது.
சூர்யமான நாயகன் ஜோவான நாயகியுடன் கொண்டிருந்த காதல் பற்றி எழுதி இருந்தோம்... இப்போது அது உண்மையாகி வாரிசும் வந்து விட்டது.
'காதல் கொண்டேன்' நாயகிக்கும்- இயக்குநருக்கும் 'அது' என்று காதல் முளைத்த காலம் தொட்டே சொல்லி வந்தோம். சொன்ன போதெல்லாம் மறுத்தார்கள். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது என்பது பத்திரிகை வாசகர்களுக்கும் சினிமாகாரர்களுக்கும் தெரியும்.
இப்படி நாளை நடப்பதை நேற்றே பதிவு செய்து காட்டிய பல சுவாரஸ்யமான 'கிசுகிசு'க்களின் தொகுப்பு இது!
சுவாரஸ்யமான தகவல்களுக்கு நேற்று- இன்று- நாளை என்ற கால வட்டம் கிடையாது. அவை எப்போதும் மார்க்கண்டேயத்தனமானது என்பதை இதைப் படித்து முடிக்கும்போது உணரலாம்! இனி 'கிசுகிசு'க்களின் உலா தொடங்குகிறது.
|