புத்தகத்தின் பெயர் : தமிழ்த் திரைப்பட வரலாறு |
விலை : ரூ.100 |
எழுத்தாளர் : திரு.முக்தா வி.சீனிவாசன் |
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம்
|
திரைப்படம் ஒரு மிகச் சிறந்த மக்கள் சாதனமாகும். எந்த ஒரு செய்தியையும் திரைப்படத்தின் வாயிலாகச் சொன்னால் அது எளிதில் மக்களைச் சென்றடைந்துவிடுகிறது. திரு.எம்.ஜி.ஆர். அவர்கள், திரு.கலைஞர் அவர்கள் தங்கள் உழைப்புடன் திரைப்பட நடிப்பாலும், வசனத்தாலும் மக்களிடையே பெரும்புகழ் பெற்றனர் என்பது அனைவரும் அறிந்த உணமையாகும்
அத்தகைய வலிமையான மக்கள் தொடர்பு சாதனமாகிய திரைப்பட வரலாற்றை குறிப்பாக தமிழ்த் திரைப்பட வரலாற்றை மிகவும் அருமையாக விளக்கும் நூல்தான் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்னும் இந்நூலாகும். இது மற்ற திரைப்பட நூல்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்று இந்நூலின் பதிப்புரையில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த செம்மையான நூலை எழுதியவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு.முக்தா வி.சீனிவாசன் ஆவார். இந்நூலை கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.100.
|