புத்தகத்தின் பெயர் :அது ஒரு கனாக்காலம் |
விலை : ரூ.95 |
எழுத்தாளர் :பாலு மகேந்திரா |
பதிப்பகம் : Mithra Arts & Creations Pvt.Ltd.,
32/9, Arcot road, Kodambakkam,
Chennai - 600 024. Tamilnadu, India.
PH:2372 3182, 2473 5314. |
"திரைக்கதை எழுதும்போது நான் ஒரு இயக்குநராகவே சிந்திக்கிறேன். படப்பிடிப்பின்போது முதலில் இயக்குநராகவும், பின் படத்தொகுப்பாளராகவும் செயல்படுகிறேன். அதன் பிற்பாடு தான் நான் ஒளிப்பதிவாளர். கடினமான வேலைதான். அதற்கென என்னை நான் பயிற்றுவித்துக் கொண்டதால், பழகிப் போய்விட்டது" என்கிறார் பாலு.
பாலு எழுதி, இயக்கிய முதல் படம் கோகிலா (1976, கன்னடம்) தேசிய விருது பெற்றது. பாலுவின் முதல் தமிழ்ப்படம் "அழியாத கோலங்கள்" இந்தப்படம் தனது தனிப்பாணியையும், தனித்துவத்தையும் அவர் அழுத்தமாக நிறுவினார். ஐரோப்பிய யதார்த்த சினிமாவின் தாக்கம் அதில் பிரதிபலித்ததை சினிமா ஆவலர்கள் கவனிக்க தவறவில்லை.
வாய்க்காலில் நீந்திப்போன சிறுவன் நீரில் மூழ்கி இறந்துபோகும் காட்சியில் சினிமாவின் அட்டகாசமான சாத்யதைகளையும், சினிமா மொழியில் அவருக்கிருக்கும் பாண்டித்தியத்தையும் காண்பித்தார். வார்த்தைகள் எதுவுமின்றி வரும் இந்தக் காட்சி மறக்கமுடியாதது.
இதுவரை பதினெட்டு படங்கள் இயக்கியுள்ள பாலுமகேந்திரா, இரண்டு படங்கள்தாம் - வீடு(1988), சந்திய ராகம் (1989) - தனக்கு முழு திருப்தியளித்ததென்றும், இப்படங்களில் தான் குறைவான சமரசங்களைச் செய்திருப்பதாகவும் 2005 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் பதிவு செய்தார். இந்த இரு படங்களிலும் அவர் சமரசம் ஏதும் செய்துகொள்ளாது புலப்படுகின்றது.
திரைக்கதை நூல் வடிவில் வருவது, ஒரு நல்ல அறிகுறி. திரைப்படத்தின் இயல்பையும், அதில் கதைப்பாத்திரப் பேச்சின் இப்படத்தின் அறியவும், சினிமாவும் நியதிகளை, தனித்துவத்தை புரிந்து கொள்ளவும் இது பயன்படும்.
-(நன்றி : சு.தியோடர் பாஸ்கரன்)
|