புத்தகத்தின் பெயர் : எனது வாழ்க்கை அனுபவங்கள் |
விலை : ரூ.40 |
எழுத்தாளர் : திரு. ஏ.வி. மெய்யப்பன் |
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
|
இந்த நூலை எழுதியவர் ஏவி.எம்.ஸ்டுடியோ அதிபர் திரு. ஏ.வி. மெய்யப்பன் அவர்கள். ஏவி.எம். ஸ்டுடியோவின் திரையுலகச் சாதனைகளை நாடே நன்கறியும் ஏவி.எம்.ஸ்டுடியோவுடன் தோன்றிய எண்ணற்ற ஸ்டுடியோக்கள் இன்று இல்லை. ஆனால் ஏவி.எம். ஸ்டுடியோ மட்டும் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் அதன் உரிமையாளர் திரு.ஏவி.மெய்யப்பன் அவர்கள் தான்.
திரு.ஏவி.மெய்யப்பன் அவர்கள் ‘எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்னும் இந்த நூலில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், ஏவி.எம்.ஸ்டுடியோ நிறுவ தான் பட்ட சோதனைகளையும் மிகவும் இனிய முறையில் கூறியுள்ளார். இந்தப் புத்தகம் ஒரு நாவலைப் படிப்பது போல் அத்தனை விறுவிறுப்பாகச் செல்கிறது. திரையுலகில் சாதிக்க விரும்பும் அத்தனை பேரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய் நூல் இது. இதனை ‘வானதி பதிப்பகம்’ மிகவும் அழகாக வெளியிட்டுள்ளது. விலை ரூ.40.
|